காயம் காரணமாக ஷிகர் தவான் உலகக்கோப்பையில் இருந்து விலகல் - அவருக்கு பதில் யார் வரப்போகிறார்கள்?

விளையாட்டு
Updated Jun 11, 2019 | 14:02 IST | Times Now

இந்தியாவின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஆண்டுகளுக்குப் பின் சேசிங்கில் தோல்வியைத் தழுவியது ஆஸ்திரேலியா. அன்றய தினம் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் அபாரமாக ஆடி சிகர் தவான் சதம் அடித்தார். 

Shikhar Dhawan
Shikhar Dhawan   |  Photo Credit: AFP

கடந்த ஞாயிற்றுக்கிழமை உலகக்கோப்பை தொடரில் தனத இரண்டாவது போட்டியை இந்தியா ஆஸ்திரேலியாவுடன் விளையாண்டது. இந்தியாவின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஆண்டுகளுக்குப் பின் சேசிங்கில் தோல்வியைத் தழுவியது ஆஸ்திரேலியா. அன்றய தினம் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் அபாரமாக ஆடி சிகர் தவான் சதம் அடித்தார். 

போட்டியின் போது ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் கோல்டர் நைல் வீடிய பந்து தவானின் இடது கையில் ஓங்கி அடித்தது. க்லௌவ்ஸ் அணிந்திருந்தாலும் கட்டை விரலில் அடி பட்டிருந்தது. அப்போது தவானுக்கு மைதானத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு மீண்டும் விளையாண்டார் தவான். இருப்பினும் அதன்பிறகு ஃபீல்டிங் செய்ய அவர் வரவில்லை. அவருக்குப் பதிலாக ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டார்.

 

 

இந்நிலையில் இன்று காலை அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறுவதாக இருந்தது. பரிசோதனை செய்த மருத்துவர்கள், தவானுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அவர் இன்னும் மூன்று வார காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் அறிவுருத்தி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர் உலகக்கோப்பை தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரும் 13-ஆம் தேதி இந்தியாவுக்கு நியூசிலாந்தோடு போட்டி இருக்கும் நிலையில், அவருக்குப் பதிலாக விஜய் சங்கர், ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது ரிஷப் பண்ட் இவர்களின் யாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட இருக்கிறது என்பதே தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

NEXT STORY