உங்க அன்பு மழையில் நனைஞ்சுட்டேன், கெத்தா திரும்பி வருவேன்... வாட்சன் வெளியிட்ட வீடியோ!

விளையாட்டு
Updated May 16, 2019 | 13:28 IST | விபீஷிகா

சென்னை அணியின் பஞ்ச் வசனமான’ விசில் போடு’ என்று கூறி வீடியோவை முடித்திருக்கிறார் இந்த ’வெள்ளைத் தமிழன்’!

watson thanks video
watson thanks video  |  Photo Credit: Instagram

இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை அணியும் இறுதிச் சுற்றில் மோதி, ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை வென்றது. கோப்பையைத் தவறவிட்டாலும் இன்று வரை அதிகம் சமூகவலைதளங்களில் பேசப்பட்டும் ஒரு அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது. அதற்குக் காரணம் ஷேன் வாட்சன்!

இறுதிப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய வாட்சன் இறுதி ஓவர் வரை நின்று ஆடி 80 ரன்கள் அடித்தார். தோனி இரண்டு ரன்களில் அவுட் ஆக, காலில் அடிபட்டு இருந்தும் வாட்சன் யாரிடமும் கூறாமல் போராடியது மேட்ச் முடிந்த அடுத்தநாள்தான் அனைவருக்கும் தெரியவந்தது. 

சென்னை அணி தோல்வி அடைந்ததை மறந்து சேன் வாட்சனைப் புகழத் தொடங்கிவிட்டனர் சென்னை ரசிகர்களும் கிரிக்கெட் ஆர்வலர்களும். மீம் கிரியேட்டர்கள் ஒரு படி மேலே போய் பாகுபலியாகவே மாற்றியிருந்தார்கள் வாட்சனை. போட்டி முடிந்தபிறகு ஆறு தையல் போடப்பட்டு இருக்கிறது வாட்சனுக்கு. அன்றையெ தினமே வீரர்கள் அனைவரும் ஊருக்குச் சென்ற நிலையில், வாட்சனும் தனது சொந்த நாடானா ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பி விட்டார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Next year we will come back stronger #whistlepodu @chennaiipl ?

A post shared by Shane Watson (@srwatson33) on

தற்போது ஊருக்கு சென்றுவிட்ட வாட்சன் தனது இன்ஸ்டாகிராமில் அனைவருக்கும் நன்றி கூறும்விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் '' இறுதிப்போட்டியில் அடிபட்டதற்கு நீங்கள் காட்டிய அன்புக்கு மிக்க நன்றி. உங்களுடைய வாழ்த்துக்களுக்கும், அக்கறைக்கும் மிகவும் நன்றி, ஒரு ரன்னில் தோல்வி அடைந்தாலும் அடுத்த வருடம் கண்டிப்பாக திரும்பி வந்து இன்னும் சிறப்பாக விளையாடுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது என்று கூறிவிட்டு, இறுதியில் தமிழில் சென்னை அணியின் பஞ்ச் வசனமான விசில் போடு என்று கூறி வீடியோவை முடித்திருக்கிறார் இந்த ’வெள்ளைத் தமிழன்’!

 

NEXT STORY
உங்க அன்பு மழையில் நனைஞ்சுட்டேன், கெத்தா திரும்பி வருவேன்... வாட்சன் வெளியிட்ட வீடியோ! Description: சென்னை அணியின் பஞ்ச் வசனமான’ விசில் போடு’ என்று கூறி வீடியோவை முடித்திருக்கிறார் இந்த ’வெள்ளைத் தமிழன்’!
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles