டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: விசா கிடைக்காததால் சாய்னா பங்கேற்பதில் சிக்கல்

விளையாட்டு
Updated Oct 08, 2019 | 19:04 IST | Times Now

அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ள டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டிக்கு வரும் வெள்ளிக்கிழமை விமானம் மூலம் டென்மார்க் புறப்பட தயாராக இருக்கும் சாய்னாவிற்கு விசா இன்னும் வழங்கப்படவில்லை.

சாய்னா நேவால், Saina Nehwal
சாய்னா நேவால்  |  Photo Credit: Twitter

டெல்லி: டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்க உள்ள சாய்னா நேவாலுக்கு விசா கிடைப்பதில் இழுபறி நீடித்ததை தொடர்ந்து தற்போது அவரது விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தமக்கு ஏற்பட்ட விசா பிரச்சனை குறித்து ட்விட்டரில் சாய்னா நேவால் பதிவிட்டதாவது: “டென்மார்க் செல்ல எனக்கும், எனது பயிற்சியாளருக்கும் உடனடியாக விசா தேவைப்படுகிறது. ஒடின்சே நகரில் அடுத்த வாரம் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் எங்கள் விசா இன்னும் தயாராகவில்லை. அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை எங்கள் போட்டிகள் தொடங்கவுள்ளன.” என்று ட்வீட் செய்த சாய்னா, உள்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்துறை அமைச்சகம், இந்தியாவில் உள்ள டென்மார்க் தூதரகம் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளை ’டேக்’ செய்தார்.

டென்மார்க் அரசாங்கத்தின் புதிய விதிமுறைகள் காரணமாக சாய்னா நேவாலுக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த மத்திய உள்துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவ் குப்தா, உரிய நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருவதாகக் கூறினார். மேலும், தாம் சாய்னா நேவாலுடன் தொடர்பில் இருப்பதாகவும் ட்விட்டர் வாயிலாக சஞ்சய் குப்தா தெரிவித்துள்ளாா்.

 

 

இதனை தொடர்ந்து ட்வீட் செய்த சாய்னா நேவால், ஹைதராபாத்தில் இன்று தனது விசா விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளாா். விடுமுறை என்றும் பாராமல் தமக்கு உதவிய சஞ்சீவ் குப்தா மற்றும் டென்மார்ட் தூதரகத்திற்கு நன்றி கூறிய சாய்னா, வெள்ளிக்கிழமை பயணத்திற்கு உரிய நேரத்தில் விசா கிடைக்கும் என நம்புவதாகக் பதிவிட்டுள்ளாா்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...