தோனி அதிரடி வீணானது: கடைசி பந்தில் ரன் அவுட்டால் பெங்களூரு அணி த்ரில் வெற்றி!

விளையாட்டு
Updated Apr 22, 2019 | 10:39 IST | Times Now

ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும், கடைசி பந்தில் ஷர்துல் தாகூர் ரன் அவுட் ஆனதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது.

கடைசி பந்தில் ரன் அவுட்டால் பெங்களூரு அணி த்ரில் வெற்றி
கடைசி பந்தில் ரன் அவுட்டால் பெங்களூரு அணி த்ரில் வெற்றி  |  Photo Credit: Twitter

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்தில் ஷர்துல் தாகூர் ரன் அவுட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனி ஆளாக கிட்டத்தட்ட வெற்றிக்கு மிக அருகே அணி கொண்டு சென்றார். கடைசி ஓவரில் 26 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி, முதல் 4 பந்துகளில் 24 ரன்களை விளாசினார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஷர்துல் தாகூர் ரன் அவுட் ஆனதால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. பார்த்தீவ் படேல் 53 ரன்களும், டிவில்லியர் 25 ரன்களும், மோயின் அலி 26 ரன்களும் எடுக்க, ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.

பின்னர், விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்தது. ஷேன் வாட்சன் விக்கெட்டை 5 ரன்களிலும், சுரேஷ் ரெய்னா விக்கெட்டை ரன் எதுவும் எடுக்காத நிலையில்லும் டேல் ஸ்டைன் வீழ்த்தினார். டூபிளிசிஸ் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேதர் ஜாதவ் அவுட் ஆனார். 

எனினும், அம்பதி ராயுடு 29 ரன்கள் எடுக்க, வெற்றிபெற கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப் பட்டது. அதிரடியாக விளையாடிய தோனி 24 ரன்களை விளாச, கடைசி பந்தில் 2 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. பந்து தோனியின் பேட்டில் படாத நிலையில், ஒரு ரன் எடுக்க முயன்றபோது, ஷர்துல் தாகூர் ரன் அவுட் ஆனார். இதனால், கடைசி பந்தில் ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணி த்ரில் வெற்றிபெற்றது. 

பார்த்தீவ் படேல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த போட்டியில் தோல்வி அடைந்தபோதும், 14 புள்ளிகளுடன்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

NEXT STORY
தோனி அதிரடி வீணானது: கடைசி பந்தில் ரன் அவுட்டால் பெங்களூரு அணி த்ரில் வெற்றி! Description: ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும், கடைசி பந்தில் ஷர்துல் தாகூர் ரன் அவுட் ஆனதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது.
Loading...
Loading...
Loading...