ராகுலின் ஃபார்ம் கவலைக்கிடம்; விரைவில் டெஸ்டிலும் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித்?

விளையாட்டு
Updated Sep 10, 2019 | 19:34 IST | Times Now

கே.எல்.ராகுல் சற்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவருக்கு பதில் டெஸ்டில் ரோஹித் ஷர்மா தொடக்க ஆட்டக்காரராக பரிசீலிக்கபடலாம் என்று தெரியவருகிறது.

டெஸ்டில் ராகுலுக்கு பதில் ரோஹித் ஷர்மா? , Rohit Sharma to replace KL Rahul as opener in Test ?
டெஸ்டில் ராகுலுக்கு பதில் ரோஹித் ஷர்மா?  

டெஸ்ட் போட்டிகளில் கே.எல்.ராகுல் சற்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவருக்கு பதில் ரோஹித் ஷர்மா தொடக்க ஆட்டக்காரராக பரிசீலிக்கபடலாம் என்று பிசிசிஐ தலைமை தேர்வு அதிகாரி எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் தொடரின் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கே.எல்.ராகுல் 13, 6, 44, 38 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டெஸ்ட் போட்டிகளில் மிடில் ஆர்டரில் விளையாடும் ரோஹித் ஷர்மாவுக்கு பதில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஹனுமா விஹாரி இடம்பெற்றார். விஹாரியும் ரஹானேவும் சிறப்பாக விளையாடிய நிலையில் டெஸ்டில் இனி அவர்கள் அடுத்த சில போட்டிகளுக்கு நிரந்தர இடம் வகிப்பார்கள் என்று தெரியவருகிகிறது. எனவே தொடக்க ஆட்டக்காரராக  கே.எல்.ராகுலின் ஃபார்ம் மோசமாகவுள்ள நிலையில் இனிவரும் போட்டிகளில் ரோஹித் ஷர்மா தொடக்க ஆட்டக்காரராக பரிசீலிக்கபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.     

இதனை பற்றி பிசிசிஐ தலைமை தேர்வு அதிகாரி எம்.எஸ்.கே பிரசாத் கூறுகையில் "வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின் தேர்வு குழுவினர்கள் நாங்கள் இதுவரை சந்திக்கவில்லை.நாங்கள் அடுத்த முறை அணி தேர்வின் போது டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் ஷர்மாவை கட்டாயம் பரிசீலிப்போம்" என்று தெரிவித்தார். மேலும் ராகுலின் ஃபார்மை பற்றி கூறுகையில் "ராகுல் மிகவும் திறமைசாலி. ஆனால் டெஸ்டில் தற்போது அவர் சற்று மோசமான தருணங்களை சந்தித்து வருகிறார். அவரின் இந்த ஃபார்மை மிகவும் கவலைகூறியது. அவர் இன்னும் அதிகம் பயிற்சி செய்து மீண்டும் சிறப்பான ஃபார்முக்கு வர வேண்டும்" என்று கூறினார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து இந்தியா அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 டி-20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்தியாவில் நடைபெறும் இத்தொடர் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 23-ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.    
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...