டி20 கிரிக்கெட்டில் முத்திரை பதித்தாா் அதிரடி மன்னன் ரோஹித் சர்மா

விளையாட்டு
Updated Nov 08, 2019 | 11:31 IST | Times Now

இந்திய அளவில் அதிக சர்வதேச டி20 போட்டிகளில் ஆடிய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா பதிவு செய்துள்ளாா்.

Rohit Sharma
ரோஹித் சர்மா  |  Photo Credit: AP

ராஜ்கோட்: பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி ரோஹித் சர்மாவின் 100 ஆவது போட்டியாக அமைந்தது. 

இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு  செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் குவித்தது.

பங்களாதேஷ் பேட்டிங்கை தொடா்ந்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி,  2 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 43 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரியுடன் 85 ரன்கள் எடுத்து அவுட்டானார். இது அவருக்கு 100 ஆவது சர்வதேச டி20 போட்டியாகும்.

 

 

இதன்மூலம் இந்திய அளவில் தோனியை முந்தி அதிக சர்வதேச டி20 போட்டிகளில் ஆடிய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா பதிவு செய்துள்ளாா். 

 

 

அவருக்கு அடுத்த இடத்தில் அப்ரிடி - 99 போட்டிகள், தோனி - 98 போட்டிகள் உள்ளனர். முதல் இடத்தில் பாகிஸ்தான் ்அணியின் சோயப் மாலிக் உள்ளாா். அவர் 111 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆடி இருக்கிறாா்.
 

NEXT STORY