ஐசிசி உலகக்கோப்பை அணி: கோலி, தோனிக்கு இடமில்லை!

விளையாட்டு
Updated Jul 15, 2019 | 20:16 IST | Times Now

உலகக்கோப்பையின் ஐசிசி அணிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

virat kohli and Dhoni, விராட் கோலி மற்றும் தோனி
விராட் கோலி மற்றும் தோனி  |  Photo Credit: AP

டெல்லி: உலகக்கோப்பையின் ஐசிசி அணிப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் தோனியின் பெயர் இடம் பெறவில்லை. 

2019 -ஆம் ஆண்டு உலகக் கோப்பை திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. பரபரப்பான இந்த தொடரின் இறுதிப் போட்டியில் கடும் போராட்டத்திற்கு இடையே நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது. கிரிக்கெட்டை உலகுக்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று இதன் மூலம் வரலாறு படைத்துள்ளது.  

இந்த நிலையில் உலகக்கோப்பையின் ஐசிசி அணிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் தோனிக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்தியாவின் ரோஹித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

ஐசிசி அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:

ரோஹித் சர்மா ( இந்தியா)

ஜேசன் ராய் ( இங்கிலாந்து)

கேன் வில்லியம்சன் ( நியூசிலாந்து)

 

 

ஷகிப் அல் ஹசன் (வங்க தேசம்)

ஜோ ரூட் ( இங்கிலாந்து)

பென் ஸ்டோக்ஸ் ( இங்கிலாந்து)

அலெக்ஸ் கேரி ( ஆஸ்திரேலியா)

மிர்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)

ஜோஃப்ரா ஆர்ச்சர் ( இங்கிலாந்து)

பெர்குசன் (நியூசிலாந்து)

பும்ரா ( இந்தியா)

ஐசிசி உலகக்கோப்பை அணியில் 12-வது வீரராக பெளல்ட் இடம்பெற்றுள்ளார். இந்த அணிக்கு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...