358 சிக்ஸர்கள், 24 சதம்! தோனியின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!

விளையாட்டு
Updated Jun 16, 2019 | 17:52 IST | Times Now

ஒரு நாள் போட்டியில் அவருக்கு இது 24-வது சதம் ஆகும். இந்த உலக கோப்பையில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் இது.

Rohit scored 140 in IndiaVsPakistan world cup match
Rohit scored 140 in IndiaVsPakistan world cup match  |  Photo Credit: AP

இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் இன்றைய உலகக் கோப்பையின் 22-வது போட்டி  இங்கிலாந்து மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே உலகக் கோப்பை இறுதிப் போட்டியை விடவும் முக்கியமாகப் பார்ப்படும்தானே?

 பரபரப்பான இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது.  இதன்படி இந்திய அணியில் ரோகித் சர்மாவும் ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரில் ரன் ஏதும் அடிக்காவிட்டாலும் அடுத்த ஓவரில் இருந்து இந்த ஜோடி விளாசியது. ரோஹித் சர்மா 61 பந்துகளில் அரைசதம் அடித்தார்.  ராகுலும் அரை சதம் அடித்தாலும் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கோலியுடன் கைகோர்த்து ரோஹித் சர்மா 85 பந்துகளில் சதமடித்தார். மொத்தம் 113 பந்துகளில் 140 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

 ஒரு நாள் போட்டியில் அவருக்கு இது 24-வது சதம் ஆகும். இந்த உலக கோப்பையில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் இது. இதற்கு முன்னால் தென்னாபிரிக்காவுடன் விளையாடிய போட்டியில் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர ரோஹித் சர்மா ஒருநாள் போட்டியில் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 358 ஆனது. இந்திய வீரர்களில் ஒரு நாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்த  வீரர் தோனி தான். இவர் சிக்ஸர்களின் அடித்திருந்தார். அந்த சாதனையை தற்போது ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். 254 சிக்சர்கள் அடித்து டெண்டுல்கர் மூன்றாவது இடத்தில் உள்ளார். 

NEXT STORY
358 சிக்ஸர்கள், 24 சதம்! தோனியின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா! Description: ஒரு நாள் போட்டியில் அவருக்கு இது 24-வது சதம் ஆகும். இந்த உலக கோப்பையில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் இது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola