பந்தை ஒளித்து வைத்து வினோதமாக பௌலிங் போட்ட அஸ்வின், வீடியோவை பாத்தீங்களா ?

விளையாட்டு
Updated Jul 23, 2019 | 16:02 IST | Times Now

ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தை ஒளித்து வைத்து வினோதமாக பந்துவீசி விக்கெட்டையும் எடுத்தார்.

Ravichandran Ashwin Bizzare bowling
அஸ்வினின் வினோதமான பௌலிங்  |  Photo Credit: Twitter

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்தை ஒளித்து வைத்து வித்தியாசமாக பந்துவீசி விக்கெட்டையும் கைப்பற்றினர்.

டி.என்.பி.எல். 4-வது சீசன் கிரிக்கெட் தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். 

இதில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மதுரை பாந்தர்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை குவித்தது. பின்னர் களம் இறங்கிய மதுரை பாந்தர்ஸ் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இறுதி ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அஸ்வின் தனது வினோதமான பௌலிங்கை வெளிப்படுத்தினர். பந்தை தன் பின்னால் ஒளித்து வைத்து கொண்டு, மிகவும் குறைந்த வேகத்தில் அவர் பந்தை வீசினர்.அந்த பந்தை அடிக்க முயன்ற பேட்ஸ்மேன் தன் விக்கெட்டை இழந்தார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.   

 

அஸ்வின் இது போன்று வினோதமாக பந்துவீசுவது இது முதல் முறை அல்ல. ஐ.பி.எல் போட்டிகளிலும் அவ்வப்போது வழக்கத்திற்கு மாறாக பந்து வீசியுள்ளார். ஆனால் அவை வீதிகளுக்கு உட்பட்டே வரும். ஆனால் இது போன்ற பந்துவீச்சு கிரிக்கெட்டின் விதிகளை மீறுகிறது என்று சிலர் விமர்சிக்கின்றனர். நடப்பு டி.என்.பி.எல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் இதே போல பந்து வீசினர் அஸ்வின். கேரம் பாலுக்கு பேர்போன அஸ்வினின் இந்த பந்தை 'போங்கு பால்' என்றும் 'சென்னை 28 மிர்ச்சி சிவா பௌலிங்'  என்றும் சிலர் கிண்டல் செய்கின்றனர்.    

இறுதியாக 2018-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய அஸ்வின், தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் டெஸ்ட் அணியில் சேர்க்கப்ட்டுள்ளார். அதிலும் இது போன்ற பந்துவீச்சை அவர் வெளிப்படுத்துவாரா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.             
  
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...