ஐபிஎல் 2020: டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இணையவுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்!

விளையாட்டு
Updated Sep 04, 2019 | 17:11 IST | Times Now

பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்த ஐபிஎல்-இல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இணையவுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்,R Ashwin set to join Delhi Capitals
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இணையவுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்  |  Photo Credit: IANS

கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு விளையாடி வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்த ஐபிஎல்-இல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜேயின்ட்ஸ் அணிக்கு விளையாடி வந்ததை தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு கிங்ஸ் XI பஞ்சாப் அணியால் ரூ 7.6 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். பின்னர் அவர் தலைமையில் 2018 மற்றும் 2019 ஐபிஎல் தொடர்களில் அந்த அணி விளையாடியது. ஆனால் இரு சீசன்களிலும் அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இந்நிலையில் தற்போது அடுத்த ஐபிஎல் தொடரில் அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு விளையாடவுள்ளார். மேலும் அதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. 

இதனை பற்றி டெல்லி கேப்பிடல்ஸ் அணி தலைமை அதிகாரி ஒருவர் கூறுகையில் "அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் தலைமை இயக்குநர் ஒருவரின் கையெழுத்து வாங்க வேண்டியுள்ளது" என்று கூறினார். மேலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஹோம் கிரவுண்டான பெரோஸ் ஷா கோட்லாவில் அஸ்வினின் பந்துவீச்சு அந்த அணிக்கு பலம் சேர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடி வந்த அஜிங்க்ய ரஹானேவை சில நாட்களுக்கு முன்பு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்க முயற்சி செய்தது. ஆனால் பின்னர் அதை பற்றிய தகவல் எதுவும் வரவில்லை. இந்நிலையில் தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதுவரை 139 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 125 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அஸ்வின் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு விளையாடவுள்ள பட்சத்தில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.                        

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...