IND vs WI: ரஹானே, ஹனுமா விஹாரி அரைசதம்; 3-வது நாள் முடிவில் இந்தியா முன்னிலை!

விளையாட்டு
Updated Sep 02, 2019 | 14:53 IST | Times Now

2-வது டெஸ்ட் போட்டியில் ரஹானே மற்றும் விஹாரியின் அரை சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 468 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணியித்துள்ளது இந்தியா.

அஜின்க்யா ரஹானே மற்றும் ஹனுமா விஹாரி அரைசதம், Rahane, vihari hit half century as india dominate day 3
அஜின்க்யா ரஹானே மற்றும் ஹனுமா விஹாரி அரைசதம்!  |  Photo Credit: Twitter

ஜமைக்கா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் அஜின்க்யா ரஹானே மற்றும் ஹனுமா விஹாரியின் அரை சததால் வெஸ்ட் இண்டீஸுக்கு 468 ரன்கள் இலக்களித்தது இந்தியா.      

பும்ராவின் ஹாட்ரிக்கால் சரிந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 87/7 என்ற நிலையில் இருந்தது. பின்னர் மூன்றாவது நாளிலும் பேட்டிங்கில் தங்களது சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இறுதியாக 117 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது வெஸ்ட் இண்டீஸ். பும்ரா அதிகப்படியாக 6 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் எடுத்தனர். ஜடேஜா மற்றும் இஷாந்த் ஷர்மா இருவரும் தலா 1 விக்கெட் எடுத்தார்.        

இதனை தொடர்ந்து 299 ரன்கள் முன்னிலையில் இருந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரோச் பந்தில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ராகுலும் 6 ரன்களுக்கு ரோச் பந்தில் அவுட் ஆனார். இதனை தொடர்ந்து களம் இறங்கிய கோலி யாரும் எதிர்பார்க்காத வகையில் ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே அவுட் ஆனார்.

பின்னர் புஜாராவும் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க 57/4 என்ற நிலையில் இருந்தது இந்தியா. இதனை தொடர்ந்து ரஹானே மற்றும் ஹனுமா விஹாரி இருவரும் அரை சதம் விளாசி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர் 168/4 என்ற நிலையில் 467 ரன்கள் லீடுடன் இந்தியா டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த ஹனுமா விஹாரி இரண்டாவது இன்னிங்ஸில் 53 ரன்களும், ரஹானே 64 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

468 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர் க்ரேக் பிரேத்வெய்ட் 3 ரன்கள் மட்டுமே எடுத்து இஷாந்த் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் காம்ப்பெல்லும் 16 ரன்களுக்கு ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியாக 45/2 என்ற நிலையில் டேரன் பிராவோ (18*) மற்றும் ஷாமார் ப்ரூக்ஸ் (4*) களத்தில் இருக்க மூன்றுவது நாள் ஆட்டம் முடிவடைந்தது.          
 

NEXT STORY
IND vs WI: ரஹானே, ஹனுமா விஹாரி அரைசதம்; 3-வது நாள் முடிவில் இந்தியா முன்னிலை! Description: 2-வது டெஸ்ட் போட்டியில் ரஹானே மற்றும் விஹாரியின் அரை சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 468 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணியித்துள்ளது இந்தியா.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles