அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரை வென்றார் ரஃபேல் நடால்!

விளையாட்டு
Updated Sep 09, 2019 | 10:55 IST | Times Now

''மெத்வதேவிற்கு வெறும் 23 வயது தான். ஆனால் கடுமையான விளையாடி ஆட்டத்தை சூடுபிடிக்க செய்தார். அவருக்கு மேலும் பல வாய்ப்புகள் வரும்,” என்றார் ரபேல் நடால்.

Rafael Nadal, ரபேல் நடால்
ரபேல் நடால்  |  Photo Credit: AP

நியூயார்க்: ரபேல் நடால் தனது 19-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் 4-வது அமெரிக்க ஓபன் பட்டத்தையும் வென்றுள்ளார். திங்கட்கிழமை ஆர்தர் ஏஷ் மைதானத்தில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் மெத்வதேவை 7-5,6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடால்.

”இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது,” என்று கூறிய நடால், “இது ஒரு அற்புதமான இறுதிப்போட்டி. மெத்வதேவிற்கு வெறும் 23 வயது தான். ஆனால் கடுமையான விளையாடி ஆட்டத்தை சூடுபிடிக்க செய்தார். அவருக்கு மேலும் பல வாய்ப்புகள் வரும்,” என்றார்.

ரோஜர் ஃபெடரர் 20 முறை கிராண்ட் ஸ்லாம் வென்ற நிலையில் தற்போது ரஃபேல் நடால் 19 வென்றிருக்கிறார். மேலும் ஒரு கிராண்ட ஸ்லாம் பட்டம் வென்றால் ரோஜர் ஃபெடரரின் சாதனையை நடால் சமன் செய்வார். 

இறுதிப்போட்டியில், முதல் 4 சுற்றுகளில் நடால் மற்றும் மெத்வதேவ் தலா 2 சுற்றுகளை கைப்பற்றினர். 5-வது சுற்றில் வெற்றிபெறுவது யார் என்று கடுமையான போட்டி நிலவிய நிலையில் ரஃபேல் நடால் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற நடாலுக்கு 3.85 மில்லியன் டாலர் பரிசுத் தொகையுடன் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. மெத்வதேவிற்கு 1.9 மில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

NEXT STORY