ஸ்பெயின்: டென்னிஸ் விளையாட்டின் நட்சத்திர வீரர் ரபேல் நடால் தனது 14 வருட காதலி ஸிஸ்கா பெரேல்லாவை சனிக்கிழமை திருமணம் செய்து கொண்டாா்.
டென்னில் விளையாட்டின் உச்ச நட்சத்திரமாக கருதப்படுபவர் ரபேல் நடால். இதுவரை 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளாா். ஸ்பெயின் நாட்டைச் சோ்ந்த இவர் தனது பள்ளி தோழியான ஸிஸ்கா பெரேல்லா என்பவரை காதலித்து வந்தாா். அதுவும் 14 ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்தனா். நடால் கலந்துகொள்ளும் போட்டிகளை பெரேல்லாவும் கண்டுகளிப்பாா். ஆனால், எந்த இடத்திலும் நெருக்கம் காட்டியது கிடையாது.
இந்நிலையில் ஸ்பெயினின் மல்லோர்கா தீவில் தனது நீண்ட நாள் காதலியான பெரேல்லாவை நேற்று திருமணம் செய்துகொண்டாா் நடால். இந்த திருமண நிகழ்ச்சிக்கு சுமார் 350 போ் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனா். உலக பிரபல சமையல் கலைஞரான டகோஸ்டா திருமண விருந்துக்கான உணவு வகைகளை தயாரித்திருந்தாா்.