அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் மெத்வதேவை எதிர்கொள்கிறார் ரபேல் நடால்

விளையாட்டு
Updated Sep 07, 2019 | 13:08 IST | Times Now

அமெரிக்க ஓபன் இறுதிப்போடியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை எதிர்கொள்ளும் ரபேல் நடால் 5-வது  முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைகிறார்.

Rafael Nadal, Daniil Medvedev, ரபேல் நடால், மெத்வதேவ்
ரபேல் நடால், மெத்வதேவ் | Photo Credit: AP, File Image 

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடந்து முடிந்த ஆடவர் ஒற்றையர் அறையிறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 2-ஆம் இடத்தில் உள்ள ரபேல் நடால் இத்தாலியின் மேட்டியோ பிரிட்டினியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை எதிர்கொள்கிறார் ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால். மற்றொரு அரையிறுதிப் போட்டியில், பல்கேரிய வீரர் திமித்ரோவை வென்றார் மெத்வதேவ்.

மெத்வதேவ் Vs. திமித்ரோவ்

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் அரையிறுதிப் போட்டியில் 7-6, 6-4, 6-3 என்ற செட்கணக்கில் வெற்றிபெற்று முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றும் வாய்ப்பை மெத்வதேவ் பெற்றுள்ளார்.

இதன் மூலம், இவான் லெண்டில், அண்ட்ரே அகாசி ஆகியோருக்கு அடுத்தபடியாக வாஷிங்டன், கனடா, சின்சின்னாட்டி மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய மூன்று தொடர்களிலும் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் மூன்றாவது வீரர் என்ற பெருமை மெத்வதேவிற்கு கிட்டியுள்ளது.

ரபேல் நடால் Vs. திமித்ரோவ்

7-6, 6-4, 6-1 என்ற செட்கணக்கில் திமித்ரோவை வென்றுள்ளார் ரபேல் நடால். இதன் மூலம், 5-வது  முறையாக இருதிப்போட்டிக்குள் நுழைகிறார் நடால். மேலும், ரோஜர் பெடரருக்கு அடுத்தபடியாக ஒவ்வொரு கிராண்ட் ஸ்லாம் போட்டியிலும் குறந்தது 5 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பெருமையும் ரபேல் நடாலுக்கு சொந்தமானது.
 
அமெரிக்க ஓபன் டென்னில் போட்டியில் மீண்டும் ஒருமுறை இறுதிப்போட்டியில் விளையாட இருப்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக 18 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ரபேல் நடால் கூறினார்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...