பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்: தங்கம் வென்று பி.வி.சிந்து வரலாற்று சாதனை!

விளையாட்டு
Updated Aug 25, 2019 | 19:34 IST | Times Now

பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார் பி.வி.சிந்து

PV Sindhu won gold in BWF World Championships
PV Sindhu won gold in BWF World Championships  |  Photo Credit: AP

பேட்மிண்டன் உலக சேம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் வரலாற்றுச் சாதனையையும் படைத்தார் பி.வி.சிந்து!

தற்போது சுவிட்சர்லாந்தில் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 2017, 18 களில் இறுதிப் போட்டிக்கு பி.வி.சிந்து முன்னேறியும் வெற்றிபெறவில்லை. மூன்றாவது முறையாக இந்த ஆண்டும், அரையிறுதியில் சீனாவின் சென் யூவுடன் மோதிய சிந்து, 21-7, 21-14 என்ற செட் கணக்கில் அவரை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானின் நசோமி ஒகுஹாராவுடன் மோதினார். 21-7, 21-7 என்ற செட் கணக்கில் அபாரமாக விளையாடி நசோமியை இறுதிச் சுற்றில் வீழ்த்தி இந்த ஆண்டுக்கான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் பி.வி.சிந்து. இதன் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை படைத்துள்ளார் பி.வி.சிந்து. இவர் தற்போது உலகத் தரவரிசையில் 5வது இடத்தில் உள்ளார். இவருக்கு பிரதமர் மோடி உட்பட பலரும் வாழ்த்துக்களக் குவித்து வருகிறார்கள். முன்னதாக தெலுங்கானாவில் அவரது இல்லத்தில் அவரது பெற்றோர் இனிப்புகளை பரிமாறி வெற்றியைக் கொண்டாடினார்கள். 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...