ஃபிட் இந்தியா இயக்கத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

விளையாட்டு
Updated Aug 29, 2019 | 16:41 IST | Times Now

ஃபிட் இந்தியா இயக்கத்தினை செயல்படுத்த மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு தலைமையில் 28 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது மத்திய அரசு.

Prime Minister Narendra Modi, பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி  |  Photo Credit: ANI

புது டெல்லி: தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு உடல்நலன் பேணுதல் மற்றும் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஃபிட் இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டது.

டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஃபிட் இந்தியா இயக்கத்தினை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து பேசியதாவது: இந்த நாளில் விளையாட்டு வீரரான மேஜர் தயான் சந்த்தை நினைவுகொள்வோம். அவர் தனது உடற்பலம் மற்றும் ஹாக்கி திறமையால் உலகை வியப்பில் ஆழ்த்தினார். உடல்நலன் பேணுதல் என்பதை நம் தினசரி மந்திரமாகக் கருத வேண்டும். ஆரோக்கியமான வாழ்விற்கு உடல்நலன் அவசியமாகும்; விளையாட்டு அதற்கு இன்றியமையாததாகும்.

ஃபிட் இந்தியா இயக்கம் என்பது அரசாங்கத்தின் விழிப்புணர்வு பிரச்சாரம் மட்டுமல்ல. அது ஒவ்வொரு இல்லத்திலும் பேசு பொருளாக வேண்டும். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் இந்தியர்கள் அவதிப்படுகின்றனர். வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வருவதன் மூலமே இது போன்ற நோய்களில் இருந்து விடுபெற முடியும். வெற்றிக்கு குறுக்குவழி ஏதும் கிடையாது. எனவே, மின்தூக்கியை மறந்து படிகளை பயன்படுத்துங்கள் என்றார் பிரதமர் மோடி.

முன்னதாக, தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ஃபிட் இந்தியா இயக்கம் துவங்கப்படும் என்று கடந்த ஆகஸ்டு 25-ஆம் தேதி ஒலிபரப்பான மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் போடி அறிவித்திருந்தார். இதனையொட்டி, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுரிகளில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு பேராசிரியர்களும் மாணவர்களும் குறைந்தது 10,000 அடிகளாவது நடக்க வேண்டும் என்று அறிவுறுத்திய பல்கலைக்கழக மானியக் குழு, தினமும் நடைபயிற்சி செய்ய முயற்சிக்க வேண்டும் என்று கூறியது.

ஃபிட் இந்தியா இயக்கத்தினை செயல்படுத்த மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு தலைமையில் 28 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது மத்திய அரசு. இக்குழுவில், விளையாட்டு, கல்வி, ஆயுஷ், இளைஞர் நலன் ஆகிய துறைகள் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம், தேசிய அளவிலான விளையாட்டு அமைப்புகள், தனியார் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளன. இவை தவிற, ஹிந்தி நடிகர்கள் ஷில்பா ஷெட்டி மற்றும் மிலிண்ட் சோமன் ஆகியோர் ஃபிட் இந்தியா இயக்கத்தின் நல்லெண்ணத் தூதர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...