இந்த முடிவு வருத்தம்தான் - இந்தியா தோல்வி குறித்து பிரதமர் மோடி

விளையாட்டு
Updated Jul 10, 2019 | 21:22 IST | Times Now

இந்த வருட உலகக்கோப்பையின் அரை இறுதிச் சுற்றில் இந்தியா, நியூசிலாந்திடம் தோல்வி அடைந்துள்ளது. இது குறித்து தனது கருத்தை மோடி தெரிவித்துள்ளார்.

PM Narendra Modi's reaction about India lost the semi final in world cup 2019
PM Narendra Modi's reaction about India lost the semi final in world cup 2019  |  Photo Credit: AP

லீக் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்த இந்தியா கண்டிப்பாக இறுதிச் சுற்றுக்கு செல்லும் என்று ரசிகர்கள் நம்பியிருந்த நிலையில் இது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சிதான். அரையிறுதிச் சுற்றில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு நுழைந்துள்ளது நியூசிலாந்து. அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் ஒரே ரன்னில் அவுட் ஆனது பெரும் பிரச்னையானது. மேலும் இந்த மைதானத்தின் பிட்ச் சுழற்பந்துக்கு சாதகமாக இருந்ததால் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். 

நேற்றைய போட்டியில் மழை தொடர்ந்து பெய்ததால், போட்டி நேற்று நிறுத்தப்பட்டு இன்று மீண்டும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் படி இன்று 3:00 மணிக்கு நியூசிலாந்து மீதமிருக்கும் 3.5 ஓவர்களை விளையாடியது. ஓவருக்கு ஒரு விக்கெட் வீதம் எட்டு விக்கெட்டுகளை இழந்து, 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து 249  ரன்கள் எடுத்தது. 250 ரன்கள் என்ற எளிய இலக்கோடு களமிறங்கிய இந்திய அணிக்கு, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 2வது ஓவரில் ரோஹித் சர்மா ஒரு ரன் இருக்கும்போது ஆட்டமிழந்தார். இதே போல கோலி 1, ராகுல் 1, தினேஷ் கார்த்திக் 6, புவனேஷ் குமார் 0, சாஹல் 5, பும்ரா 0 என்று விக்கெட்டுகள் சரிந்தன. அதிகபட்சமாக ஜடேஜா 77, தோனி 50 ரன்கள் அடித்தனர். இறுதியில் இந்திய அணி 49.3 பந்துகளில் 221 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

இந்த உலகக்கோப்பையில் இறுதுச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது. நாளை செமி ஃபைனலில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. அதில் வெற்றி பெற்ற அணியோடு வரும் ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து இறுதிச்சுற்றுக்கு செல்லுகிறது. இந்திய அணி உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய நிலையில் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள். பிரதமர் மோடியும் இது பற்றித் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் தோல்வியுற்றது மிகுந்த ஏமாற்றமாக உள்ளது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் அணி இந்த தொடர் முழுக்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் சகஜம். வருங்காலங்களில் வரும் போட்டிகளுக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

 

 

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...