நெருக்கடியை சமாளிக்கும் அணிக்கு வெற்றி வாய்ப்பு: விராட் கோலி!

விளையாட்டு
Updated Jul 08, 2019 | 17:36 IST | Times Now

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நாளை நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ள நிலையில், இனி தவறுகளுக்கு இடமே இல்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்

நெருக்கடியை சமாளிக்கும் அணிக்கு வெற்றி வாய்ப்பு: விராட் கோலி
நெருக்கடியை சமாளிக்கும் அணிக்கு வெற்றி வாய்ப்பு: விராட் கோலி  |  Photo Credit: AP

மான்செஸ்டர்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நாளை நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ள நிலையில், இனி வரும் போட்டிகளில் தவறுகளுக்கு இடமே இல்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். கடந்த உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், அவர்களுக்கு நாக் அவுட் போட்டிகளில் எவ்வாறு விளையாட வேண்டும் என நன்றாகத் தெரியும் என்றும் கோலி கூறியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நாளை நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ஓல்டு டிராபோஃர்டு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கு முன்னதாக கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு தான் தலைமை தாங்கிபோது, கேன் வில்லியம்சன் நியூசிலாந்துக்கு தலைமை தாங்கியதை கோலி நினைவு கூர்ந்தார். நாளைய போட்டியின்போது கேன் வில்லியம்சனுக்கு இதனை ஞாபகப்படுத்த உள்ளதாகத் தெரிவித்த கோலி, 11 ஆண்டுகளுக்குப்பிறகு இருவரும் தங்கள் அணிக்கு தலைமை தாங்குவதை நினைத்து பார்பது இனிமையான அனுபவம் என்றும் தெரிவித்தார்.

நாளைய அரையிறுதிப் போட்டியின்போது முடிவுகள் எடுப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இரு அணிகளும் இதுபோன்ற போட்டிகளில் விளையாடுவதற்கு போதுமான அனுபவம் உள்ளவை என்றும் தெரிவித்தார். எந்த அணி மிகுந்த தைரியத்துடனும், சிறப்பாக கணக்கீட்டு விளையாடுகிறதோ, அந்த அணிக்கு வெற்றிபெற வாய்ப்பு அதிகம் என்பதை உணர்ந்துள்ளோம் என்றும் விராட் கோலி தெரிவித்தார். எந்த அணி நெருக்கடியே எளிதாக சமாளிக்கிறதோ, அந்த அணிக்கு வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் விராட் கோலி தெரிவித்தார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து இடையேயான லீக் போட்டி மழையால் கைவிடப்பட்டது. எனினும், பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணி தோற்கடித்தது. இது அந்த அணிக்கு சற்று சாதமான அம்சமாக இருந்தாலும், கடைசியாக விளையாடிய 3 லீக் ஆட்டங்களிலும் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இது இந்திய அணிக்கு சாதமான அம்சமாக கருதப்படுகிறது. 


 

NEXT STORY
நெருக்கடியை சமாளிக்கும் அணிக்கு வெற்றி வாய்ப்பு: விராட் கோலி! Description: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நாளை நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ள நிலையில், இனி தவறுகளுக்கு இடமே இல்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola