தோனியின் ஓய்வு வெறும் வதந்தி....எம்.எஸ்.கே பிரசாத், தோனி மனைவி சாக்‌ஷி விளக்கம்!

விளையாட்டு
Updated Sep 12, 2019 | 19:16 IST | Times Now

தோனி இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்திப்பார் என்றும் அப்போது அவரின் ஓய்வை அறிவிப்பார் என்றும் செய்திகள் வெளிவந்த நிலையில் சாக்‌ஷி மற்றும் எம்எஸ்கே பிரசாத் விளக்கம் அளித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தோனியின் ஓய்வு குறித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி, MSK Prsad, Sakshi Dhoni clarify Dhoni retirement rumours
தோனியின் ஓய்வு குறித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி  |  Photo Credit: IANS

பிசிசிஐ தலைமை தேர்வு அதிகாரி எம்.எஸ்.கே பிரசாத் தோனியின் ஓய்வு குறித்து எவ்வித தகவலும் இல்லை என்றும் அவரின் ஓய்வு பற்றி வெளிான செய்திகள் பொய்யானது என்றும் தெரிவித்துள்ளார்.   

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 2016-ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தோனியுடன் விளையாடியதை குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தோனியின் ஓய்வு பற்றிய செய்திகள் சமூக ஊடங்களில் வேகமாக பரவ தொடங்கின. மேலும் தோனி இன்று மாலை 7.00 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கவுள்ளதாகவும் அப்போது அவரின் ஓய்வு பற்றிய அறிவிப்பை தெரிவிப்பார் என்றும் தகவல்கள் பரவியது. 

 

 

இந்த செய்திகளால் பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். தோனியின் ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் தோனியை பற்றி உருக்கமாக பதிவிட்டதோடு, ஒய்வு பெற வேண்டாம் என்றும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தோனியின் ஓய்வு பற்றி பரவிவந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிசிசிஐ தலைமை தேர்வு அதிகாரி எம்.எஸ்.கே பிரசாத். அவர் இந்த செய்திகளை பற்றி கூறுகையில் தோனியின் ஓய்வு குறித்து எவ்வித தகவலும் இல்லை என்றும் அவரின் ஓய்வு பற்றி வெளியான செய்திகள் பொய்யானது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தோனியின் மனைவி சாக்ஷியும் தன் ட்விட்டர் பக்கத்தில் அவை வெறும் வதந்திகள் தான் என்று தெரிவித்துள்ளார். இந்த தகவலால் தோனியின் ரசிகர்கள் தற்போது சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.      

 

 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய தோனி, அதன் பிறகு இந்திய ராணுவத்தின் பாராச்சூட் ரெஜிமென்டில் 2 மாதங்கள் பயிற்சி பெற்று வந்தார். அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால் தோனி அடுத்து விளையாடுவாரா? என்பதும் ஓய்வு பற்றி அறிவிப்பாரா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.        

    

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...