தோனி கிளவுஸ் சர்ச்சை.. பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி!

விளையாட்டு
Updated Jun 08, 2019 | 08:37 IST | Times Now

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் விக்கெட் கீப்பர் தோனி வேற கிளவுஸ் அணிந்து விளையாடுவார் என தெரிகிறது.

MS Dhoni's wicket keeper
எம்.எஸ். தோனி, விக்கெட் கீப்பர்  |  Photo Credit: IANS

லண்டன்: ராணுவ முத்திரை அணிந்த கீப்பிங் கிளவுஸ் அணிந்து தோனி விளையாட அனுமதிக்க வேண்டும் என பிசிசிஐ விடுத்த கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி.  

இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதிய உலக்கோப்பை லீக் போட்டி கடந்த 5-ம் தேதி சவுதாம்டன் நகரில் நடந்தது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் போது விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி ராணுவ முத்திரை பதித்த கீப்பிங் கிளவுஸ் அணிந்து விளையாடினார். இது இந்திய ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. தோனியின் நாட்டுபற்றுக்கு சமூகவலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்திருந்னர். 

இதற்கிடையில், தோனி அணிந்து விளையாடிய விக்கெட் கீப்பிங் கிளவுசில் இருக்கும் முத்திரையை நீக்க வேண்டும் என பிசிசிஐயிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வலியுறுத்தியது.  மேலும், ஒரு கிளவுசில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு முத்திரைகள் மட்டுமே இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது. 

ஐசிசி விதிகளின்படி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரரின் உடையில் தேசம், மதம், அரசியல், இனம், மொழி உள்ளிட்டவை தொடர்பான முத்திரைகளுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐக்கு கடிதம் எழுதியது ஐசிசி. அதில், தோனி அணிந்துள்ள கிளவுசில் இடம்பெற்றுள்ள முத்திரை மத ரீதியான இல்லை எனக் குறிப்பிட்டு அதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.  

ஆனால், பிசிசிஐ விடுத்த கோரிக்கை ஐசிசி நிராகரித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோனி வேற கிளவுஸ் அணிந்து விளையாடுவார் என தெரிகிறது. ஐசிசியின் இந்த அறிவிப்பு இந்திய ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. 

NEXT STORY
தோனி கிளவுஸ் சர்ச்சை.. பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி! Description: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் விக்கெட் கீப்பர் தோனி வேற கிளவுஸ் அணிந்து விளையாடுவார் என தெரிகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles