தோனின்னு கூப்டமாட்டாங்க தலன்னுதான் கூப்டுவாங்க - சென்னை ரசிகர்கள் பற்றி தோனியின் உணர்ச்சிமிக்க பேச்சு!

விளையாட்டு
Updated May 02, 2019 | 08:01 IST | Times Now

சென்னையில் இந்த ஐபில் தொடருக்கு இதுதான் சி.எஸ்.கேவின் இறுதிப்போட்டி என்பதால் நேற்று மேட்சைவிடவும் சுவாஸ்யமாகவும் எமோஷனலாகவும் இருந்தது அதன்பின் நடந்த விஷயங்கள!.

dhoni with staffs
சி.எஸ்.கே தோனி   |  Photo Credit: Twitter

ஐபிஎல் தொடரின் 50-வது போட்டி நேற்று சென்னையில் சி.எஸ்.கேவுக்கும் டெல்லிக்கும் இடையெ நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சென்னை அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது தோனிக்கு வழங்கப்பட்டது. 

நேற்று மேட்ச் மிகவும் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருந்தது. ஆனால் அதனைவிட மேட்ச் முடிந்தபின் நடந்த விஷயங்கள் இன்னும் சுவாரஸ்யமாகவும் எமோஷனலாகவும் இருந்தது. ஆம், ஐபிஎல் விதிமுறைப்படி நடப்புச் சேம்பியன்களின் சொந்த மண்ணில்தான் இறுதிப் போட்டி நடைபெற வேண்டும். ஆனால் இந்த வருடம் இறுதிப்போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. அதனால் நேற்றைய ஆட்டம்தான் சென்னையில் நடைபெறும் இறுதி ஆட்டம். இதற்குப் பிறகு குவாலிஃபயர் 1 போட்டி மட்டுமே சென்னையில் நடக்கவிருக்கிறது.

அதன் காரணமாகவும் நேற்று உழைப்பாளர்கள் தினம் என்பதாலும் போட்டி முடிந்தபின் தோனி மைதானத்தில் இருந்த அனைத்து ஊழியர்களுடனும் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

 

 

 

 

போட்டி முடிந்தபின்னும் ரசிகர்கள் கலையாமல் தல தல என்று ஆரவாரம் செய்து கொண்டே இருந்தனர். ஹர்ஷா போக்ளே தோனியிடம் ஏன் உங்களை எல்லாரும் தல என்று அழைக்கிறார்கள் என்று கேட்க, அதற்கு அவர், எனக்கும் இது புதிதாகதான் இருந்தது. சி.எஸ்.கே டைட்டில் பாடலில் கூட தல தொனிக்கு என்று வரும். அப்போது எனக்கு என்னவென்று புரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் என்னை தோனி என்று அழைப்பதில்லை, தல என்றுதான் அழைக்கிறார்கள். நானும் அவர்களின் அன்பைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டேன். எனக்கு மட்டுமல்ல மற்ற வீரர்களுக்கு சென்னை ரசிகர்களின் மிகுந்த ஊக்கம் அளிக்கின்றனர். அதுதான் எங்களின் பலம், நாங்கள் அவர்களுக்கு மிகவும் கடமைபட்டிருக்கிறோம் என்று உணர்ச்சிப்பொங்கத் தெரிவித்தார்.

 

 

அதன்பிறகு மற்ற வீரர்களும் தோனியும் ரசிகர்களுக்கு பந்துகள், தொப்பிகள், டிசர்ட்டுகளை பரிசாக வழங்கினர். சென்னை அணி ஏற்கனவே அனைவரையும் துவம்சம் செய்து முதல் இடத்தில் இருப்பதால் கண்டிப்பாக இறுதிப்போட்டிக்கு சென்றுவிடும் என்று ரசிகர்கள் முழு நம்பிக்கையில் இருக்கிறார்கள். அதனால் சென்னையில் போட்டி இல்லை என்பது சற்று ஏமாற்றம்தான் என்றாலும் சி.எஸ்.கே எங்கே விளையாண்டாலும் அதற்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கத்தானே செய்கிறது!

NEXT STORY
தோனின்னு கூப்டமாட்டாங்க தலன்னுதான் கூப்டுவாங்க - சென்னை ரசிகர்கள் பற்றி தோனியின் உணர்ச்சிமிக்க பேச்சு! Description: சென்னையில் இந்த ஐபில் தொடருக்கு இதுதான் சி.எஸ்.கேவின் இறுதிப்போட்டி என்பதால் நேற்று மேட்சைவிடவும் சுவாஸ்யமாகவும் எமோஷனலாகவும் இருந்தது அதன்பின் நடந்த விஷயங்கள!.
Loading...
Loading...
Loading...