’கிரிக்கெட்..பைக்..இப்போ இது’ - புதிய சீக்ரெட்டை வெளியிட்ட ‘தல’ தோனி!

விளையாட்டு
Updated May 20, 2019 | 16:03 IST | Times Now

ஏற்கனவே கிரிக்கெட் தாண்டி பைக் ரேஸிலும் ஆர்வமுடைய தோனி தற்போது தன்னுடைய புதிய ஆர்வம் குறித்த வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். 

cricket, கிரிக்கெட்
மகேந்திர சிங் தோனி  |  Photo Credit: Twitter

சென்னை: இந்திய அணியின் செல்ல வீரரான மகேந்திர சிங் தோனி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் போட்டிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இவர் விளையாடி வருவதால் தமிழக ரசிகர் பட்டாளமும் இவருக்கு அதிகம். இவரும், இவரது மகள் ஷிவாவும் சேர்ந்து வெளியிடும் வீடியோக்கள் எப்போதுமே சமூக வலைத்தளத்தில் மாஸ் ஹிட்.

இந்நிலையில், ஏற்கனவே கிரிக்கெட் தாண்டி பைக் ரேஸிலும் ஆர்வமுடைய தோனி தற்போது தன்னுடைய புதிய ஆர்வம் குறித்த வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் அவர், “எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடித்த ஒன்று. எனினும், ஓவியம் வரைவதிலும் ஆர்வம் அதிகம். சில ஓவியங்களை நான் இதுவரை வரைந்துள்ளேன். விரைவில் என்னுடைய முதல் ஓவியக் கண்காட்சியை நடத்த உள்ளேன். எனினும், அதற்கு சில காலம் ஆகும். ஓவியம் வரையத் தெரிந்தவர்கள் எனக்கு நல்ல டிப்ஸ்களை வழங்குங்கள். அதை நான் ஏற்றுக் கொள்ள ரெடியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். தான் வரைந்துள்ள சில ஓவியங்களைக் காண்பித்து அதன் நினைவுகளையும் பகிர்ந்துள்ளார் தோனி. ‘நீங்க கலக்குங்க தல’ என்று தோனி ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். 

NEXT STORY
’கிரிக்கெட்..பைக்..இப்போ இது’ - புதிய சீக்ரெட்டை வெளியிட்ட ‘தல’ தோனி! Description: ஏற்கனவே கிரிக்கெட் தாண்டி பைக் ரேஸிலும் ஆர்வமுடைய தோனி தற்போது தன்னுடைய புதிய ஆர்வம் குறித்த வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola