தோனி ரன் அவுட்டே இல்லை.. சமூகவலைதளங்களில் கொந்தளிக்கும் ரசிகர்கள் !

விளையாட்டு
Updated Jul 11, 2019 | 12:06 IST | Times Now

நியூசிலாந்து உடனான அரையிறுதி போட்டியில் தோனி அவுட் ஆனது 'நோ பால்' என்று ரசிகர்கள் கூறி வருவது சர்ச்சை கிளப்பியுள்ளது.

MS Dhoni dismissed in 'No Ball'
நோ பாலில் அவுட் ஆனார் தோனி   |  Photo Credit: Twitter

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் தோனி அவுட் ஆனது  'நோ பால்' என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. ஓபனிங் பேட்டிங் ஆர்டர் சீட்டுகட்டுபோல் சரிந்ததால் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டிய மிகக் கடினமான பொறுப்பு தோனி, ஜடேஜாவிடம் வந்தது. அவர்களும் பொறுப்புடன் பேட்டிங் செய்தனர். ஜடேஜா 77 ரன்கள் எடுத்த போது அவுட்டாகினார். 

இறுதியில் 10 பந்துகளில் 25 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஸ்டிரைகில் இருந்த தோனி லெக் சைடில் பந்தை அடித்து முதல் ரன்னை எடுத்தார். பின்பு இரண்டாவது ரன்னை எடுக்க முயன்ற போது ரன் அவுட் ஆனார். அந்த தருணத்தோடு இந்திய அணியின் வெற்றி கனவு உடைந்தது. 

இந்தநிலையில் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ள சில புகைப்படங்கள், வீடியோக்களால் தோனி அவுட் இல்லை. அது 'நோ பால்' என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. தோனி அவுட்டாகும் போது மூன்றாவது பவர்பிலேவில் 30-யார்டு வட்டத்தை விட்டு அதிகபட்சமாக 5 பேர் மட்டுமே வெளியே இருக்க முடியும். ஆனால் அப்போது 6 பேர் வெளியே இருந்தனர். இதனை கவனிக்காத அம்பயர்கள் அந்த பந்தை நோ பால் என்று அறிவிக்கவில்லை. தற்போது இதுதான் சர்ச்சைக்கு காரணம். இதை வைத்து சமூகவலைதளங்களில் கண்டனங்கள் உலாவருகின்றன.பெரும்பாலானோர் சமூக ஊடகங்களில் அம்பயரை வசைபாடிவதோடு, அந்த பந்து 'நோ பால்' என்பதால் அடுத்த பந்தும் 'பிரீ ஹிட்' ஆக அமைந்து இருக்கும். எனவே தோனி இரண்டாவது ரன்னை எடுக்க முயன்று அவுட் ஆகியிருக்க மாட்டார் என்றும் கூறிவருகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

ரசிகர்கள் கூறுவது போல அந்த பந்தில் தோனி அவுட் ஆகாமல் இருந்திருந்தால் வெற்றி அனேகமாக இந்திய அணிக்கே கிடைத்திருக்கும். பெரும் திருப்புமுனையாக அமைந்த அந்த பந்தில், இப்படி ஒரு தவறை அம்பயர்கள் செய்துள்ளதாக சமூகவலைதளங்களில் தோனி ரசிகர்கள் விமர்சனம் செய்துவருகின்றனர்.

NEXT STORY
தோனி ரன் அவுட்டே இல்லை.. சமூகவலைதளங்களில் கொந்தளிக்கும் ரசிகர்கள் ! Description: நியூசிலாந்து உடனான அரையிறுதி போட்டியில் தோனி அவுட் ஆனது 'நோ பால்' என்று ரசிகர்கள் கூறி வருவது சர்ச்சை கிளப்பியுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola