பத்ம விருதுகள்: மேரி கோம், பி.வி.சிந்து உள்ளிட்ட 9 வீராங்கனைகள் பரிந்துரை

விளையாட்டு
Updated Sep 18, 2019 | 13:44 IST | Times Now

விஸ்வநாதன் ஆனந்த் (2007), சச்சின் டெண்டுல்கர் (2008) மற்றும் சர் என்மண்ட் ஹில்லேரி (2008) ஆகிய மூன்று விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே இதுவரை பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Mary Kom, PV Sindhu, மேரி கோம், பி.வி.சிந்து
மேரி கோம், பி.வி.சிந்து  |  Photo Credit: IANS

மேரி கோம், பி.வி.சிந்து உள்ளிட்ட 9 விளையாட்டு வீராங்கனைகளின் பெயர்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் பத்ம விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோமிற்கு 2006-ல் பத்மஸ்ரீ விருதும், 2013-ல் பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பத்ம விபூஷண் விருதுக்கு மேரி கோமின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பி.வி.சிந்துவின் பெயர் பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. முன்னதாக, 2017-ல் இதே விருதுக்காக பி.வி.சிந்துவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்ட போதிலும் இறுதி பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை.

மேரி கோம், பி.வி.சிந்து தவிர பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 7 பெண்களின் பெயர்கள் விவரம்:

  • வினேஷ் போகாட் (மல்யுத்தம்)
  • மனிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்)
  • ஹர்மன்பிரீத் கவுர் (கிரிக்கெட்)
  • ராணி ராம்பால் (ஹாக்கி)
  • சுமா ஷிரூர் (துப்பாக்கிச் சுடுதல்)
  • டஷி மாலிக் மற்றும் நுங்ஷி மாலிக் (மலையேறுதல்)

மேற்கண்ட ஏழு பேரும் பத்மஸ்ரீ விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

விஸ்வநாதன் ஆனந்த் (2007), சச்சின் டெண்டுல்கர் (2008) மற்றும் சர் என்மண்ட் ஹில்லேரி (2008) ஆகிய மூன்று விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே இதுவரை பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு விளையாட்டு வீராங்கனைக்குக் கூட இதுவரை பத்ம விபூஷண் விருது வழங்கப்படவில்லை.

உள்துறை அமைச்சகத்தின் பத்ம விருதுகள் தேர்வுக் குழுவிற்கு இப்பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. 2020-ஆம் ஆண்டின் குடியரசு தினத்தன்று பத்ம விருதுகள் பெறுவோரின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...