தயது செய்து வேண்டாம் தோனி - லதா மங்கேஷ்கரின் வேண்டுகோள்

விளையாட்டு
Updated Jul 11, 2019 | 18:51 IST | Times Now

தோனியின் ஓய்வு குறித்து இந்தியாவின் மிகப்பெரிய பாடகி லதா மங்கேஷ்கர் தோனிக்கு உருக்கமாக ஒரு செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

லதா மங்கேஷ்கர் - மகேந்திர சிங் தோனி
லதா மங்கேஷ்கர் - மகேந்திர சிங் தோனி  |  Photo Credit: Twitter

இப்போது இருக்கும் இந்திய அணிதான் பெஸ்ட் அணி. எப்போதும் பேட்டிங்கில் தரமாக இருக்கும் இந்திய அணிக்கு  பௌலிங்கில் தகராறுதான். ஆனால் இந்த முறை பேட்டிங்கிலும் சரி, பௌலிங்கிலும் சரி அனைத்திலுமே பக்கா என்று பேர் வாங்கியது. போலவே ஆஸ்திரேலியாவையெல்லாம் பின்னுக்குத் தள்ளி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்று புள்ளிப்பட்டியலில் முதலிடமும் பிடித்தது. 

இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நாட்டினருக்குமே இந்திய அணி கண்டிப்பாக ஃபைனல்தான் செல்லப்போகிறது என்று நம்பினார்கள். நன்பினார்கள் என்பதைவிட மனதில் ஃபிக்ஸ் செய்தே விட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். அப்படி இருக்கும்போது எல்லாம் தலைகீழானது நேற்றைய அரையிறுதிச் சுற்றில். நியூசிலாந்திடம் போராடித் தோல்வி அடைந்தது இந்தியா. தோனிக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பையாக இருக்கக்கூடும் என்பதால் அவருக்கு உலகக்கோப்பை கப்பை கையில் கொடுக்க முடியவில்லை என்ற ஆதங்கம்தான் அனைவருக்கும்.

அதுவும் நேற்று ஐந்து பெரிய விக்கெட்டுகளைத் தொடக்கத்திலேயே இழந்தும் கூட தோனி ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் இருந்தனர் ரசிகர்கள். அந்த நம்பிக்கையை தோனியுமே காப்பாற்றினார். ஆனால் தோனியின் ரன் அவுட், போட்டியை மாற்றியது. இந்தியா தோல்வி. தற்போதுவரை ஒருவராலும் ஜீரணிக்க முடியாத ஒரு விஷயமாகிப் போனது. தோனி ஹேட்டர்ஸ் எல்லாம் ஏன் தோனி இன்னும் ரிட்டயர்மெண்ட்டை அறிவிக்க வில்லை எனக் கேட்க, தோனி ரசிகர்கள் ரிட்டயர்மெண்ட் ஆகாதீர்கள் தோனி என்று கண்ணீர் விட்டு வருகிறார்கள். அவர்களைப் போலவே இந்தியாவின் மிகப்பெரிய பாடகி லதா மங்கேஷ்கர் தோனிக்கு உருக்கமாக ஒரு செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அதில், ’’நீங்கள் ஓய்வு பெறப் போகிறீர்கள் என்று நான் கேள்விபடுகிறேன். தயவு செய்து அப்படி ஒரு முடிவு எடுப்பது பற்றி ஒரு போதும் நினைக்காதீர்கள். உங்களைப் போன்று விளையாடுபவர்கள் இந்திய அணிக்குத் தேவை. இது என்னுடைய வேண்டுகோள்’’ என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். இவரைப் போலவே ரசிகர்களும் #donotretiredhoni, #DhoniForever போன்ற ஹேஷ்டேகில் தங்களது உணர்வுகளைப் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

NEXT STORY