சர்வதேச டி-20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி மலிங்கா சாதனை!

விளையாட்டு
Updated Sep 02, 2019 | 13:02 IST | Times Now

சர்வதேச டி-20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையை படைத்துள்ளார் லசித் மலிங்கா.

சர்வதேச டி-20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி மலிங்கா சாதனை, Malinga surpasses afridi to become leading wicket taker in T20I
சர்வதேச டி-20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி மலிங்கா சாதனை 

சர்வதேச டி-20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையை படைத்துள்ளார் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா.

இலங்கை அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா கடந்த ஜூலை மாதம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியோடு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து தற்போது டி-20 போட்டிகளில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். நியூசிலாந்து அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் 1-1 என்ற கணக்கில் ட்ரா ஆன நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் மூடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. பின்பு களம் இறங்கிய நியூசிலாந்து அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அப்போட்டியில் 2 விக்கட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி-20 போட்டிகளில் அதிக விக்கட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் லசித் மலிங்கா. 74 போட்டிகளில் விளையாடியுள்ள மலிங்கா 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 99 போட்டிகளில் 98 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் ஓய்வு பெற்ற பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிதி உள்ளார். 

'யாக்கர் மன்னன்' மலிங்கா தற்போது 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில் சர்வதேச டி-20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைக்க இன்னும் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுகிறது. மலிங்கா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி-20 உலகக்கோப்பையில் இலங்கை அணிக்கு அவர் மிக முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.                
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...