தோனி பற்றித் தவறாகக் கூறவில்லை - குல்தீப் யாதவ் மறுப்பு

விளையாட்டு
Updated May 15, 2019 | 16:04 IST | Times Now

இதனை நேற்றிலிருந்து ஊடங்கள் தோனியின் டிப்ஸ் பல முறை தவறாகத்தான் இருந்தது என்று குல்தீப் யாதவ் கூறியதாக செய்திகள் வெளியிட்டன.

kuldeep yadav with dhoni
kuldeep yadav with dhoni  |  Photo Credit: AP

நேற்று தோனியைப் பற்றி குல்தீப் யாதவ் பேசியதாக வெளியான செய்திகள் சர்ச்சைய ஏற்படுத்தியது. தற்போது அதனை குல்தீப் யாதவ் மறுத்துள்ளார்.

நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட குல்திப் யாதவ்விடம் தோனியைப் பற்றி தொகுப்பாளர் பல கேள்விகளைக் கேட்டார். தோனி உங்களுக்கு டிப்ஸ்களை வழங்குவாரா என்று கேட்டதற்கு பெரும்பாலும் அவர் அமைதியாகதான் இருப்பார் யாரிடிமும் அதிகம் பேசமாட்டார் என்றார். அடுத்து மைதானத்தில் அவர் வழங்கும் டிப்ஸ் உங்களுக்கு உதவியிருக்கிறதா? அவரிடம் அவர் வழங்கும் டிப்ஸ்கள் பற்றி எதிர்கேள்வி கேட்டதுண்டா என்ற கேள்விக்கு, அப்படி தவறாக இருந்தாலும் நான் எப்படி அவரிடம் சொல்ல முடியும் என்று யதார்த்தமாக பதில் கூறியிருந்தார்.

குல்தீப் யாதவ்

இதனை நேற்றிலிருந்து ஊடங்கள் தோனியின் டிப்ஸ் பல முறை தவறாகத்தான் இருந்தது என்று குல்தீப் யாதவ் கூறியதாக செய்திகள் வெளியிட்டன. இதனை முற்றிலும் மறுத்துள்ள குல்தீப் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தோனி மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. எங்கு சென்றாலும் ஏன் தேவை இல்லாமல் சர்சையைக் கிளப்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஊடகங்கள் குறிபிட்டதுபோல நான் தோனியைப் பற்றி எதுவும் தவறாகக் கூறவில்லை. யாரைப் பற்றியும் கூறவில்லை. என்று தெரிவித்துள்ளார்.

NEXT STORY
தோனி பற்றித் தவறாகக் கூறவில்லை - குல்தீப் யாதவ் மறுப்பு Description: இதனை நேற்றிலிருந்து ஊடங்கள் தோனியின் டிப்ஸ் பல முறை தவறாகத்தான் இருந்தது என்று குல்தீப் யாதவ் கூறியதாக செய்திகள் வெளியிட்டன.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles