தென் ஆப்பிரிக்கா தொடர்: டெஸ்ட் அணியில் ராகுல் இல்லை...ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு!

விளையாட்டு
Updated Sep 12, 2019 | 20:07 IST | Times Now

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் அணியில் இடம்பெறவில்லை. இளம் வீரர் ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா தொடரின் டெஸ்ட் அணியில் ராகுல் இல்லை,KL Rahul dropped from south africa test's
தென் ஆப்பிரிக்கா தொடரின் டெஸ்ட் அணியில் ராகுல் இல்லை  |  Photo Credit: Twitter

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கே.எல்.ராகுல் அதில் இடம்பெறவில்லை. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்தியா அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. 3 டி-20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடர் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 23-ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் இன்று டெஸ்ட் தொடருக்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் டெஸ்ட் அணியில் கே.எல்.ராகுல் இடம்பெறவில்லை. அவருக்கு பதில் இளம் வீரர் ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

 

 

20 வயதேயான ஷுப்மன் கில் இதுவரை சர்வதேச அளவில் இந்தியாவுக்காக 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு விளையாடியதில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் டெஸ்ட் போட்டிகளில் கே.எல் ராகுல் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய நிலையில், தற்போது அவருக்கு பதில் ரோஹித் ஷர்மா தொடக்க ஆட்டக்காரராக விளையாடவுள்ளார். 

 

 

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்டில் மிடில் ஆர்டரில் ரஹானே, விஹாரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஷுப்மன் கில்லுக்கு மிடில் ஆர்டரில் வாய்ப்பு கிடைப்பது சற்று கடினம். இருப்பினும் அணியில் யாராவது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலோ அல்லது காயமானாலோ அவர் விளையாட வாய்ப்புள்ளது.  

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...