பெண்கள் பற்றி சர்ச்சை பேச்சு.. ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம்

விளையாட்டு
Updated Apr 20, 2019 | 13:28 IST | Times Now

இந்திய கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ. 20 லட்சம் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது.

 KL Rahul and Hardik Pandya, கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா
கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா  |  Photo Credit: Instagram

டெல்லி: டிவி நிகழ்ச்சியில் பெண்களை பற்றி சர்ச்சை கருத்து கூறிய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோருக்கு ரூ. 20 லட்சம் அபராதம் விதித்தது பிசிசிஐ.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் இயக்குனர் கரண் ஜோஹர் நடத்தும் "காஃபி வித் கரண் " டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் பெண்களின் வாழ்க்கை முறை மற்றும் இனவெறியை தூண்டுதல் உள்ளிட்டவை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்தனர். இந்த விவகாரம் பூதாகரமானது. இருவரும் கடும் விமர்சனத்திற்கு ஆளாகினார்கள். இதனை அடுத்து தனது தவறுக்கு ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டார்.

இந்த விவகாரம் குறித்து இருவரிடமும் விளக்கம் கேட்டு இந்திய கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. மேலும், பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை குழு இருவரிடமும் விசாரணை நடத்தியது.  விசாரணையின் முடிவில், ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல். ராகுலுக்கு ரூ. 20 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக அறிவித்தது. 

பார்வையற்றோர் கிரிக்கெட் அமைப்புக்கு இருவரும் தலா ரூ.10 லட்சம் அளிக்க வேண்டும் மற்றும் பணியின் போது உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் இருவரும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை 4 நாட்களுக்குள் இருவரும் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
 

NEXT STORY
பெண்கள் பற்றி சர்ச்சை பேச்சு.. ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம் Description: இந்திய கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ. 20 லட்சம் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது.
Loading...
Loading...
Loading...