ஐபிஎல் ஸ்வாரஸ்யம்.. தோனிக்கு ஊட்டிவிட்ட கேதர் ஜாதவ் - வைரல் வீடியோ

விளையாட்டு
Updated Apr 15, 2019 | 18:57 IST | Times Now

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி - ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் இணைந்து ஒரே தட்டில் சாப்பிடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.

Kedar Jadhav and dhoni, கேதர் ஜாதவ் மற்றும் மகேந்திர சிங் தோனி
கேதர் ஜாதவ் மற்றும் மகேந்திர சிங் தோனி  |  Photo Credit: Instagram

கொல்கத்தா:  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு ஆல் ரவுண்டர்கேதர் ஜாதவ் உணவு ஊட்டிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கிறிஸ் லின் 51 பந்துகளில் 7 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உதவியுடன் 82 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா பேட்டிங்கை தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி, 19. 4 ஓவரில்  5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Bromance ❤️

A post shared by Kedar Jadhav (@kedarjadhavofficial) on

 

அதிரடியாக ஆடிய சுரேஷ் ரெய்னா 42 பந்துகளில் 58 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 7 பவுண்டரி, 1 சிக்ஸர் அடங்கும். 17 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் குவித்த ஜடேஜாவும் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். 

இந்த போட்டி முடிந்த பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இரவு உணவு சாப்பிடச் சென்றனர். அப்போது தல தோனி - கேதர் ஜாதவ் ஒரே தட்டில் சாப்பிட்டனர். தோனிக்கு ஜாதவ் ஊட்டிவிட்டார். இந்த வீடியோவை ஜாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இருவரும் இணைந்து ஒரே தட்டில் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

NEXT STORY
ஐபிஎல் ஸ்வாரஸ்யம்.. தோனிக்கு ஊட்டிவிட்ட கேதர் ஜாதவ் - வைரல் வீடியோ Description: சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி - ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் இணைந்து ஒரே தட்டில் சாப்பிடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.
Loading...
Loading...
Loading...