பாகிஸ்தான் தோல்விக்கு பர்கர் காரணமா? வீரர்களை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

விளையாட்டு
Updated Jun 17, 2019 | 13:16 IST | Times Now

பாகிஸ்தான் தோல்விக்கு பர்கர் உண்டதே காரணம் என அந்நாட்டு வீரர்களை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் தோல்விக்கு பர்கர் காரணமா?
பாகிஸ்தான் தோல்விக்கு பர்கர் காரணமா?  |  Photo Credit: AP

இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்ததே இல்லை என்ற சாதனையை தொடர்ந்து வருகிறது இந்திய அணி. இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் 7 முறை பாகிஸ்தானை எதிர்கொண்டுள்ள இந்திய அணி அனைத்திலும் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதோடு, அந்நாட்டு கிரிக்கெட் அணி வீரர்களின் மீது கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது. ரசிகர்கள் பலர் பாகிஸ்தான் வீரர்களை வறுத்தெடுத்து வருகின்றனர். குறிப்பாக பாகிஸ்தான் வீரர்கள் பர்கர் சாப்பிட்டதே தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

உலகப் பிரசித்திபெற்ற அமெரிக்க துரிதமான பர்கர் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்தியாவுடனான போட்டிக்கு முந்தைய நாள் பர்கர் உண்ட பாகிஸ்தான் வீரர்களை ரசிகர் ஒருவர் திட்டித்தீர்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் பல ரசிகர்களும் அதே கருத்தை தெரிவித்துள்ளனர்.
 

இந்த போட்டியில் டாஸ் வென்றது சிறப்பானது. எனினும், நாங்கள் சரியா பந்துவீசவில்லை. இந்தப்போட்டியின் வெற்றி ரோஹித் சர்மாவுக்கே சேரும். அவர் சிறப்பாக விளையாடினார் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது போட்டி முடிந்தபின்னர் கருத்து தெரிவித்திருந்தார். 

உலகக்கோப்பை போட்டியில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதனால், அடுத்த 4 போட்டிகளிலும் சிறப்பான வெற்றியை பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பு கிடைக்கும்.

 

NEXT STORY
பாகிஸ்தான் தோல்விக்கு பர்கர் காரணமா? வீரர்களை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்! Description: பாகிஸ்தான் தோல்விக்கு பர்கர் உண்டதே காரணம் என அந்நாட்டு வீரர்களை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola