’வேர்ல்ட் கப்’ பயிற்சிக்காக நாடு திரும்பும் வீரர்கள் - சிக்கலில் ஐபிஎல்?!

விளையாட்டு
Updated Apr 25, 2019 | 21:54 IST | Times Now

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே 30ம் தேதியன்று இங்கிலாந்தில் துவங்குகிறது. இதில் பங்கேற்கவிருக்கும் வீரர்கள் பட்டியலை எல்லா நாடுகளும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கொடுத்துள்ளன.

IPL 2019, ஐபிஎல் 2019
ஐபிஎல் வீரர்கள்  |  Photo Credit: Twitter

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபடுவதற்காக மற்ற நாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்புவதால் ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் 12வது தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இண்டியன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாட்சன், தாஹிர், பிராவோ, டுபிளிசிஸ், பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸ், ஸ்டோய்னிஸ், மொயின், ஹைதராபாத் அணியில் வார்னர், பேர்ஸ்டோவ், ரஷித் கான், ராஜஸ்தான் அணியில் ஸ்மித், ஸ்டோக்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் முக்கியமான ஆட்டக்காரர்களாக பங்கேற்று விளையாடி வருகின்றனர். 

தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே 30ம் தேதியன்று இங்கிலாந்தில் துவங்குகிறது. இதில் பங்கேற்கவிருக்கும் வீரர்கள் பட்டியலை எல்லா நாடுகளும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கொடுத்துள்ளன.

மே 30ம் தேதிக்கு கிட்டதட்ட குறுகிய காலமே உள்ள நிலையில் உலகக்கோப்பை போட்டிகளுக்கான பயிற்சியை எல்லா நாடுகளும் ஆரம்பிக்க உள்ளன. இதன்காரணமாக ஐபிஎல் போட்டிகள் முடிவடையும் முன்பாகவே மற்ற நாட்டு வீரர்கள் நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து வீரர்கள் 26ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய உத்தரவினால் அவர்களில் பெரும்பாலோனோர் நாடு திரும்பி விட்டனர். அதே போன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் மே 2ம் தேதியிலிருந்து பிரிஸ்பேனில் நடக்கும் பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என்பதால் அவர்களும் விரைவாக நாடு திரும்ப உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுபிளிசிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் நாடு திரும்ப இருக்கின்றனர். மற்ற அணிகளில் இருந்து பெரும்பான்மையான வீரர்கள் நாடு திரும்புகின்றனர்.

இந்நிலையில் நியூசிலாந்து மட்டும் தங்கள் வீரர்களை ஐபிஎல் முடிந்து பயிற்சிக்கு வந்தால் போதும் என்று தெரிவித்துள்ளது. எனவே, அவர்கள் தொடர்ந்து விளையாட வாய்ப்புள்ளது. 

NEXT STORY
’வேர்ல்ட் கப்’ பயிற்சிக்காக நாடு திரும்பும் வீரர்கள் - சிக்கலில் ஐபிஎல்?! Description: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே 30ம் தேதியன்று இங்கிலாந்தில் துவங்குகிறது. இதில் பங்கேற்கவிருக்கும் வீரர்கள் பட்டியலை எல்லா நாடுகளும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கொடுத்துள்ளன.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles