ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி: பிபியை எகிற அடித்து சிஎஸ்கேவை வீழ்த்திய மும்பை-வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றது!

விளையாட்டு
Updated May 13, 2019 | 00:04 IST | Times Now

முதல் ஓவரை சிஎஸ்கே அணியில் தீபக் சஹார் கையிலெடுத்திருந்தார். முதல் ஓவரில் மும்பை 2 ரன்கள் எடுத்திருந்தது. இப்போட்டியில் மும்பை அணி இறுதியில் வெற்றி வாகை சூடியுள்ளது.

IPL 2019, ஐபிஎல் 2019
ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இண்டியன்ஸ்  |  Photo Credit: Twitter

ஹைதராபாத்: ஐபிஎல் 2019ம் ஆண்டு லீக் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்து மும்பை இண்டியன்ஸ் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. 

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் இடையே ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. 

டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ரோஹித் சர்மா மற்றும் குயிண்டோன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 4 விக்கெட் இழப்பிற்கு, 13 ஓவரில் 90 ரன்கள் எடுத்தது மும்பை.  முதல் ஓவரை சிஎஸ்கே அணியில் தீபக் சஹார் கையிலெடுத்திருந்தார். முதல் ஓவரில் மும்பை 2 ரன்கள் எடுத்திருந்தது. 

இரண்டாவது ஓவரில் ஸ்ரதுல் வீசிய பந்தில் சிக்ஸர் அடித்து அசத்தினார் ரோஹித். மூன்றாவது ஓவரில் தீபக் சஹார் மீண்டும் பந்து வீச, டிகாக் 3 சிக்ஸர்களைப் பறக்க விட்டார். டிகாக், 5வது ஓவரில் தோனியின் கேட்சில் ஆட்டமிழந்தார். மீண்டும் ஆறாவது ஓவர், இரண்டாவது பந்தில் கேட்ச் பிடித்து ரோஹித் விக்கெட்டை வீழ்த்தினார் தோனி.  ஹர்பஜன் சிங்  ஓவர்களில் மும்பை அணி 7 மற்றும் 5 ஆகிய ரன்களை எடுத்தது. 

20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது மும்பை இண்டியன்ஸ் அணி. இதனால் சிஎஸ்கே அணிக்கு 150 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து பேட்டிங்கில் களமிறங்கியது சென்னை அணி, 7 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ரன்களை எடுத்தது.

10 ஓவரில், ராகுலின் பந்தில் ஆட்டமிழந்த சுரேஷ் ரெய்னா. எல்.பி.டபிள்யூ கொடுத்தும் ரிவ்யூ கேட்ட ரெய்னாவுக்கு அவுட்டே பதிலாக கிடைத்தது. 13வது ஓவர் முடிவில் தோனி ரன் அவுட் ஆகி வெளியேறியது சிஎஸ்கே ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. அதுவும் மில்லி மீட்டர் இஞ்சில், ரிவ்யூ மேல் ரிவ்யூ போட்டு அவுட் ஆக்கினார்கள் அம்பயர்கள்.  சிஎஸ்கே அணியில் பெரும்பாலும் 2, 3 எனவே ரன்கள் சேர்ந்து வந்தது. சிஎஸ்கேவின் கல்தூணாக நின்று வாட்சன் மட்டுமே  சிக்சரை அடித்தார். 18வது ஓவர் முடிவில் சென்னை டூபிளிசிஸ், ரெய்னா, ராயுடு மற்றும் தோனி ஆகிய 4 விக்கெட்டுகள் இழப்பில் 132 ரன்கள் எடுத்திருந்தது.

சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் அளவிற்கு இதன்பிறகு போட்டி மேலும் சூடு பிடித்தது. 19 ஓவர் முடிவில் ப்ராவோ அவுட் ஆகி சிஎஸ்கே 141 ரன்களை எடுத்திருந்தது. 20வது ஓவரை மும்பை அணியிலிருந்து மலிங்கா வீசினார். வாட்சன் 80 ரன்களை எடுத்திருந்தார். 19.4 ஓவர்கள் முடிவில் வாட்சன் ரன் அவுட் ஆனார். மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் என ரசிகர்கள் பாரபட்சமின்றி பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த நிலையில் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தூரத்தில், மலிங்காவின் கடைசி பந்தான யார்க்கரில் ரன் அவுட் ஆனார் ஷ்ர்துள். இவர் தூள் தூளாக்கிய பந்தால் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது மும்பை இண்டியன்ஸ். மலிங்கா, வாட்சனுக்கு ரன்களை வாரிக் கொடுத்திருந்தாலும் கடைசி கட்டத்தில் மும்பை அணி வெற்றியைத் தட்டிச் செல்லவும் அவரே காரணமாகிவிட்டார். இறுதியில் சென்னை 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை எடுத்த சிஎஸ்கே அணியை, ஒற்றை ரன் வித்தியாசத்தில் வென்றது மும்பை இண்டியன்ஸ் அணி. 

முன்னதாக 3 முறை சென்னை மற்றும் மும்பை தலா 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. இந்நிலையில், இன்றைய வெற்றியால் நான்காவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது மும்பை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

NEXT STORY
ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி: பிபியை எகிற அடித்து சிஎஸ்கேவை வீழ்த்திய மும்பை-வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றது! Description: முதல் ஓவரை சிஎஸ்கே அணியில் தீபக் சஹார் கையிலெடுத்திருந்தார். முதல் ஓவரில் மும்பை 2 ரன்கள் எடுத்திருந்தது. இப்போட்டியில் மும்பை அணி இறுதியில் வெற்றி வாகை சூடியுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles