கேப்டன் மாறிய ராசியா? மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி!

விளையாட்டு
Updated Apr 20, 2019 | 20:47 IST | Times Now

தொடரில் இரண்டு போட்டிகள் மட்டுமே வென்றிருப்பதால் இந்த போட்டியில் இருந்து ரெஹானேவைத் தூக்கிவிட்டு ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக அறிவித்திருந்தது ராஜஸ்தான்.

IPL 2019, RRvMI, Match 36:
IPL 2019,RRvMI, Match 36:  |  Photo Credit: AP

இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 36-வது போட்டியில் ராஜஸ்தான் அணி மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.

ஜெய்பூரில் நடைபெற்ற இந்தப்போடியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக்கும் கேப்டன் ரோஹித் சர்மாவுக் களமிறங்கினர். ஐந்து ரன் அடித்தவுடன் ரோஹித் சர்மா அவுட்டாக அதன்பிறகு வந்த சூர்யகுமார் நிதானமாக விளையாடினார். 100 ரன்கள் வரை மும்பை அணி ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்தது. ஆனால் 65 ரன்கள் வரை அடித்த டி காக்கும் சூர்யக்குமாரும் 14 வத் ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக ஐந்து விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 161 ரன்கள் எடுத்திருந்தது.

162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடரில் இரண்டு போட்டிகள் மட்டுமே வென்றிருப்பதால் இந்த போட்டியில் இருந்து ரெஹானேவைத் தூக்கிவிட்டு ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக அறிவித்திருந்தது ராஜஸ்தான். இனி வரும் ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே-ஆஃப் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்ற கட்டாயத்திலேயே ஆட்டத்தைத் தொடங்கியது ராஜஸ்தான். தொடக்க ஆட்டக்காரர்களாக ரெஹானேவும் சஞ்சு சாம்சனும் களமிறங்கினர்.

மூன்றாவது ஓவரிலேயே 12 ரன்களுடன் ரஹேனே வெளியேறினார். அதன் பிறகு வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக ஆடி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். அவர் பின் வந்த ஸ்டோக்ஸ் ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆக, பராக் 43 ரன்கள் விளாசினார். வெற்றி வாய்ப்பு பிரகாடமாக இருந்த நிலையில் 17வது ஓவரில் அடுத்தடுத்து பராகும் டர்னரும் அவுட் ஆனார்கள். இருப்பினும் ஸ்மித்தின் உதவியால் ஐந்து பால் மீதமிருந்த நிலையில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடித்து ராஜஸ்தான் வெற்றிபெற்றது. சந்தேகமின்றி ஸ்டீவ் ஸ்மித்துக்கு மேன் ஆஃப் தி மேட்ச் கிடைத்தது. இந்த வெற்றியின் மூலம் பாயிண்ட்ஸ் டேபிளில் எந்த முன்னேற்றமும் இன்றி ஏழாவது இடத்திலேயே இருந்தாலும் அடுத்தடுத்து வரவிருக்கும் போட்டிகளை எதிர்கொள்ள இந்த வெற்றி மிகவும் முக்கியமாய் அமைந்திருக்கிறது.

 

NEXT STORY
கேப்டன் மாறிய ராசியா? மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி! Description: தொடரில் இரண்டு போட்டிகள் மட்டுமே வென்றிருப்பதால் இந்த போட்டியில் இருந்து ரெஹானேவைத் தூக்கிவிட்டு ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக அறிவித்திருந்தது ராஜஸ்தான்.
Loading...
Loading...
Loading...