IPL 2019, RR vs DC, Match 40: ராஜஸ்தானை வீழ்த்தி பாயிண்ட்ஸ் டேபிளில் முதலிடம் பிடித்த டெல்லி!

விளையாட்டு
Updated Apr 23, 2019 | 11:04 IST | Times Now

13 வது ஓவரில் அரை சதம் அடித்து ஸ்மித் வெளியேறினாலும் சிறப்பான ஆட்டத்தால் ரஹானே சதம் அடித்து சாதனைப் படைத்தார்.

IPL 2019, RR vs DC, Match 40
IPL 2019, RR vs DC, Match 40  |  Photo Credit: AP

ஐபிஎல் தொடரின் 40-வது போட்டி நேற்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் அணிக்கும் டெல்லி கேப்பிட்டஸ்ஸுக்கும் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானேவும் சஞ்சு சாம்சனும் களமிறங்கினர். சஞ்சு ரன் ஏதும் எடுக்காமல் இரண்டாவது ஓவரிலேயே அவுட் ஆகி அதிர்ச்சிக் கொடுத்தார். அதன்பிறகு களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்தும் ரஹானேவும் ரன்களைக் குவிக்கத்தொடங்கினர். 

13 வது ஓவரில் அரை சதம் அடித்து ஸ்மித் வெளியேறினாலும் சிறப்பான ஆட்டத்தால் ரஹானே சதம் அடித்து சாதனைப் படைத்தார். 20 ஓவர் இறுதியில் ஆறு விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 191 ரன்கள் குவித்திருந்தது. ஏற்கனவே பாயிண்ட்ஸ் டேபிளில் ஏழாவதாக இருப்பதால், ப்ளே-ஆஃப்க்கு போகும் வாய்ப்பு மிகமிகக் குறைவு என்றாலும் இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதால் ராஜஸ்தான் அணிக்கு பயங்கர அழுத்தம் இருந்தது.எப்படியும் இந்தப் போட்டியில் வெற்றிபெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் ஃபீல்டிங் செய்யக் களமிறங்கியது ராஜஸ்தான். ஆனால்...

192 ரன்கள் எடுத்தால் வெர்ரி என்ற இலக்கோடு களமிறங்கிய டெல்லி அணியில் இருந்து தவானும் ப்ரித்வி ஷாவும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். தொடக்கத்தில் சுமாராக ஆடிய அணியை நான்கவதாகக் களமிறங்கிய பண்ட் மேஜிக் செய்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் என்றுதான் கூறவேண்டும். 36 பந்துகளில் 78 ரன்கள் விளாசினார். இதில் 4 சிக்ஸ்கள், 6 பௌண்டரிகள் அடக்கம். இறுதியில் டெல்லி அணி 4 விக்கெட்டுக்கள் இழப்புக்கு நான்கு பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 193 ரன்கள் அடித்து வெற்றிப்பெற்றது. ரஹானே சதம் அடித்தாலும், குறைந்த பந்தில் ரன்களைக் குவித்த பன்ட்டுக்கு மேன் ஆஃப் தி மேட்ச் வழங்கப்பட்டது. 

இன்று 41-வது போட்டியில்  சின்னசாமி ஸ்டேடியத்தில்  சென்னை சூப்பர் கிங்ஸும் ஹைதராபாத் அணியும் விளையாடுகிறது. ப்ளே-ஆஃப்க்கு செல்ல பஞ்சாப் அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் கடும் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
IPL 2019, RR vs DC, Match 40: ராஜஸ்தானை வீழ்த்தி பாயிண்ட்ஸ் டேபிளில் முதலிடம் பிடித்த டெல்லி! Description: 13 வது ஓவரில் அரை சதம் அடித்து ஸ்மித் வெளியேறினாலும் சிறப்பான ஆட்டத்தால் ரஹானே சதம் அடித்து சாதனைப் படைத்தார்.
Loading...
Loading...
Loading...