தொடர் தோல்வியால் கேப்டனை மாற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

விளையாட்டு
Updated Apr 20, 2019 | 18:11 IST | Times Now

ப்ளே-ஆஃப் நெருங்கும் நிலையில் ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானேவைத் தூக்கிவிட்டு ஸ்டீவ் ஸ்மித்தை புதிய கேப்டனாக அறிவித்திருக்கிறது.

Rajasthan Royals appoint Steve Smith as captain
Rajasthan Royals appoint Steve Smith as captain  |  Photo Credit: AP

இந்த அண்டு ஐபிஎல் தொடரின் ப்ளே-ஆஃப் நெருங்கும் நிலையில் ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானேவைத் தூக்கிவிட்டு ஸ்டீவ் ஸ்மித்தை புதிய கேப்டனாக அறிவித்திருக்கிறது. தற்போது ஐபிஎல்-இன் 36 வது போட்டி ஜெய்பூரில் ராஜஸ்தான் அணிக்கும் மும்பை இந்தியன்ஸுக்கும் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் தான் ராஜஸ்தான் அணி இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை சந்தித்த எட்டு போட்டிகளில் ஆறு போட்டிகள் ராஜஸ்தான் தோல்வி அடைந்து, பாயிண்ட்ஸ் டேபிளில் ஏழாவதாக இருப்பதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

ஸ்டீவ் ஸ்மித் பாலை சேதப்படுத்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதற்கு முன்னால் அவர்தான் ராஜஸ்தான் அணிக் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வெளியேறிய பிறகே ரெஹானே கேப்டாக நியமிக்கப்பட்டார். சென்ற வருடம் இவர் தலைமையிலான ராஜஸ்தான் அணி ப்ளே-ஆஃப்க்கும் சென்றது. இருப்பினும் ஸ்டீவ் ஸ்மித் உலகக்கோப்பை காரணமாக வரும் மே-1 ஆம் தேதி இருந்து ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார்.

அதனால் இன்று விளையாடிக்கொண்டு இருக்கும் போட்டி உட்பட இன்னும் ஐந்து போட்டிகளுக்கு மட்டுமே இவர் கேப்டனாக இருப்பார். ப்ளே-ஆஃப்க்கு செல்ல நடைபெற்றுக் கொண்டிருக்கும் தகுதி சுற்றுகளில் இன்னும் ஆறு போட்டியை ராஜஸ்தான் அணி எதிர்கொள்ள வேண்டும். தற்போது இருக்கும் சூழலில் ஆறு போட்டியிலுமே வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் அணி உள்ளது.

NEXT STORY
தொடர் தோல்வியால் கேப்டனை மாற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ்! Description: ப்ளே-ஆஃப் நெருங்கும் நிலையில் ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானேவைத் தூக்கிவிட்டு ஸ்டீவ் ஸ்மித்தை புதிய கேப்டனாக அறிவித்திருக்கிறது.
Loading...
Loading...
Loading...