IPL 2019, MI vs DC, Match 34: 40 ரன் வித்தியாசத்தில் வென்று டெல்லியை துவம்சம் செய்த மும்பை!

விளையாட்டு
Updated Apr 19, 2019 | 08:57 IST | Times Now

ஐபிஎல் தொடரின் 34-வது போட்டி நேற்று டெல்லியில் மும்பை இந்தியன்ஸுக்கும் டெல்லி கேப்பிடல்ஸுக்கும் நடைபெற்றது.

IPL 2019, MI vs DC, Match 34:
IPL 2019, MI vs DC, Match 34:  |  Photo Credit: AP

நேற்று நடைபெற்ற போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி பாயிண்ட்ஸ் டேபிளில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது மும்பை அணி.

ஐபிஎல் தொடரின் 34-வது போட்டி நேற்று டெல்லியில் மும்பை இந்தியன்ஸுக்கும் டெல்லி கேப்பிடல்ஸுக்கும் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. கேப்டன் ரோஹித் சர்மாவும் டி காக்கும் முதலில் களமிறங்கினர். இருவருமே நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். முதல் விக்கெட்டான ரோஹித் வெளியேறிபோது ரன்ரேட் 57-ஆக இருந்தது. பென் கட்டிங் தவிர களமிறங்கிய அனைத்து வீரர்களும் நன்றாகவே ஆடினர். இறுதியில் 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 168 ரன்கள் அடித்திருந்தது. 

169 ரன்கள் எடுத்தால் வெற்றி, ரன்ரேட் ஒன்றும் அவ்வளவு பெரிய இலக்காக இல்லை என்ற நம்பிக்கையில் களமிறங்கியது டெல்லி அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக தவானும் ப்ரித்விஷாவும் வந்தனர். மும்பை போலவே இந்த அணியும் ஆறாவது ஓவரில் தான் விக்கெட்டை இழந்தது. கிட்டத்தட்ட இரு அணியும் ஒரே ரன்ரேட்தான். ஆனால் ஆறாவது ஓவரில் தவான் அவுட் ஆக அதன்பின் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழத் தொடங்கின. அதன்பிறகு படேல் மட்டும்தான் அதிகபட்சமாக 26 ரன்கள். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்திலேயே அவுட் ஆனார்கள். இறுதியில் 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. 40 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபாரமாக வெற்றி பெற்றது. மேன் ஆஃப் தி மேட்ச் மும்பை அணியின் ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது.

இதனால் டெல்லியை ஓவர்டேக் செய்து பாயிண்ட்ஸ் டேபிளில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் 35-வது போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூரு அணியும் கொல்கத்தா ஈடன் மைதானத்தில்  மோதுகின்றன. 

NEXT STORY
IPL 2019, MI vs DC, Match 34: 40 ரன் வித்தியாசத்தில் வென்று டெல்லியை துவம்சம் செய்த மும்பை! Description: ஐபிஎல் தொடரின் 34-வது போட்டி நேற்று டெல்லியில் மும்பை இந்தியன்ஸுக்கும் டெல்லி கேப்பிடல்ஸுக்கும் நடைபெற்றது.
Loading...
Loading...
Loading...