IPL 2019, KXIP vs RR, Match 32: ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் அசத்தல் வெற்றி!

விளையாட்டு
Updated Apr 17, 2019 | 07:53 IST | Times Now

இந்த வெற்றியின் மூலம் பாயிண்ட்ஸ் டேபிளில் நான்காவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது பஞ்சாப்.

IPL 2019, KXIP vs RR, Match 32
IPL 2019, KXIP vs RR, Match 32  |  Photo Credit: PTI

நேற்று நடைபெற்ற ஐபில் தொடரின் 32-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் அணி. 

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெய்லும், ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். சிக்ஸைப் பறக்கவிட்டுப் போட்டியைத் தொடங்கிய கெய்ல் ஆறாவது ஓவரில் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் 17 ஓவர் வரைத் தாக்குபிடித்து அரை சதம் அடித்தார். ராகுலுக்கு பதில் களமிறங்கிய மில்லர் சிறப்பாக ஆடி 27 பாலில் 40 ரன்கள் குவித்தார். 20 ஓவர் இறுதியில் ஆறு விக்கெட்டை இழந்து 182 குவித்தது.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கோடு களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் பட்லரும் ராகுல் திரிபாதியும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். பஞ்சாப் அணியின் ராகுல் போலவே இந்த ராகுலும் அரை சதம் அடித்தார். பட்லர் 27 ரன்கள் அடித்து இருக்கையில் நான்காவது ஓவரிலேயே அவுட் ஆனார். அதன்பிறகு வந்த சஞ்சு சாம்சன் 27 ரன்களும் கேப்டன் ரஹானேவும் 26 ரன்கள் இருக்கையில் அவுட் ஆக அதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட் விழத் தொடங்கியது. இறுதியில் பஞ்சாபின் பௌலிங்குகு தாக்குப்பிடிக்க முடியாத ராஜஸ்தான் ஏழு விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. 

பஞ்சாப் அணியின் கேட்பன் அஸ்வின்தான் மேன் ஆஃப் தி மேட்ச்.  இந்த வெற்றியின் மூலம் பாயிண்ட்ஸ் டேபிளில் நான்காவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது பஞ்சாப். இன்று ஹைதராபாத்தில் நடைபெறும் 33-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. 

NEXT STORY
IPL 2019, KXIP vs RR, Match 32: ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் அசத்தல் வெற்றி! Description: இந்த வெற்றியின் மூலம் பாயிண்ட்ஸ் டேபிளில் நான்காவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது பஞ்சாப்.
Loading...
Loading...
Loading...