IPL 2019, KKR vs RR, Match 43: கடைசி ஓவரில் ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

விளையாட்டு
Updated Apr 26, 2019 | 08:20 IST | Times Now

கொல்கத்தா அணியில் யாரும் எதிர்பாராத வகையில் ரன் ஏதும் எடுக்காமல் க்ரிஸ் லின் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

IPL 2019, KKR vs RR, Match 43:
IPL 2019, KKR vs RR, Match 43:  

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றை பெற்றது.

ஐபிஎல் தொடரின் 43-வது போட்டி கொல்கத்தாவில் ராஜ்ஸ்தானுக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையே நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக க்ரிஸ் லின்னும் சுபன் கில்லும் களமிறங்கினர். யாரும் எதிர்பாராத வகையில் ரன் ஏதும் எடுக்காமல் க்ரிஸ் லின் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

கில்லும் 14 ரன்களில் நடையைக் கட்ட ராணாவுடன் கேப்டன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். ஆனால் தினேஷ் ஒரு ரன் அடிப்பதற்குள்ளாகவே ராணாவும் அவுட்டானார். அப்போது ஸ்கோர் எட்டு ஓவருக்கு 42 மட்டுமே. அதன் பின் தினேஷ் கார்த்திக் சற்று சுதாரித்து ரன்களை எடுக்கத் தொடங்கினார். சிறிது நேரத்துக்கெல்லாம் கேமார் வானத்தைப் பார்த்தே நின்று கொண்டிருந்தது. மொத்தம் ஒன்பது சிக்ஸ், ஏழு பௌண்ட்ரி. இறுதிவரை அவுட் ஆகாமல் 97 ரன்களைக் குவித்திருந்தார் தினேஷ் கார்த்திக். இறுதியில் 20 ஓவரில் ஆறு விக்கேட் இழப்புக்கு 175 ரன்கள் என்ற டீஸண்ட்டான ஸ்கோரை எடுத்திருந்தது கொல்கத்தா அணி.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானேவும் சஞ்சு சாம்சனும் களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி நன்றாக ஸ்கோர் செய்யத் தொடங்கினர். ரஹானே ஐந்தாவது ஓவரில் அவுட் ஆகும்போது ஸ்கோர் 53ஆக இருந்தது. ஆனால் அடுத்த ஓவரிலேயே சஞ்சுவும் அவுட் ஆனார். அதன் பின் வந்த கேப்டன் ஸ்வீட் ஸ்மித்தும் இரண்டு ரன்னில் அவுட் ஆக ராஜஸ்தானுக்கு மிகவும் பின்னடைவாக இருந்தது. 
சுனில் நரேன் மற்றும் பியூஷ் சாவ்லாவின் பௌலிங்கின் ஐந்து முக்கியமான விக்கேட்டுகள் 10 ஓவரில் காலியானது. அப்போது 100 ரன்கள் தேவை என்ற நிலையில் ரியான் பராக் வந்தார். சற்று நிதானமாக ஆடியவர் இரண்டு சிக்ஸ் மற்றும் ஐந்து ஃபோர் அடித்து 47 ரன்களை பெற்றார். அதன்பிறகும் விக்கெட் வீழ்ந்தாலும் ஒரு வழியாக கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலைக்கு வந்தது ராஜஸ்தான். இறுதி ஓவரில் ஆர்ச்சர் ஒரு பௌண்ட்ரி, ஒரு சிக்ஸ் அடித்து ராஜஸ்தானை வெற்றிபெறச் செய்தார்.

இறுதியில் ஏழு விக்கெட் இழப்புக்கு 19.2 ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆர்.சி.பி  அணியைப் பின்னுக்குத் தள்ளி பாயிண்ட்ஸ் டேபிளில் ஏழாவதாக இருக்கிறது. நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த வருண் ஆரோனுக்கு மேன் ஆஃப் தி மேட் வழங்கப்பட்டது. இன்று 44-வது போட்டியில்  சி.எஸ்.கேவும் மும்மை இந்தியன்ஸும் சென்னையில் மோதுகின்றன. 

NEXT STORY
IPL 2019, KKR vs RR, Match 43: கடைசி ஓவரில் ராஜஸ்தான் த்ரில் வெற்றி! Description: கொல்கத்தா அணியில் யாரும் எதிர்பாராத வகையில் ரன் ஏதும் எடுக்காமல் க்ரிஸ் லின் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles