ஐபிஎல்-ல யாரு படம் ஓடுனாலும் நாங்க தான் அங்க ஹீரோ - ஹர்பஜன் சிங்

விளையாட்டு
Updated Apr 24, 2019 | 12:28 IST | Times Now

ஐபிஎல்-ல கிடைக்குற கோப்பைக்கு கௌரவம் இருக்கு அத எடுக்கிற கைகளுக்கு பின்னால சரித்திரம் உண்டு என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

Harbhajan Singh, ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங், சென்னை சூப்பர் கிங்ஸ்  |  Photo Credit: Twitter

சென்னை: ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

12- வது ஐபிஎல் சீசன் 41-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்தது.  டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 49 பந்துகளில் 83 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், 19.5-வது ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. ஷேன் வாட்சன் அதிரடியாக 53 பந்துகளில் 96 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் ஷேன் வாட்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஐபிஎல்-ல கிடைக்குற கோப்பைக்கு கௌரவம் இருக்கு அத எடுக்கிற கைகளுக்கு பின்னால சரித்திரம் உண்டு. ஆனா அந்த கோப்பையை அடிக்கறதுக்கு ஏற்கனவே சென்னைனு ஒரு டீம் இன்னைக்கு பிளே ஆஃப்ல கால் பதிச்சுட்டாங்கனு தெரிய படுத்த வேண்டிய நேரம். ஐபிஎல்-ல யாரு படம் ஓடுனாலும் நாங்க தான் அங்க ஹீரோ’ என்று பதிவிட்டுள்ளார்

NEXT STORY
ஐபிஎல்-ல யாரு படம் ஓடுனாலும் நாங்க தான் அங்க ஹீரோ - ஹர்பஜன் சிங் Description: ஐபிஎல்-ல கிடைக்குற கோப்பைக்கு கௌரவம் இருக்கு அத எடுக்கிற கைகளுக்கு பின்னால சரித்திரம் உண்டு என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles