ரசிகர்கள் அதிர்ச்சி.. இரண்டே நிமிடத்தில் விற்றுத் தீா்ந்த ஐபிஎல் டிக்கெட்!

விளையாட்டு
Updated May 09, 2019 | 15:47 IST | Times Now

ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் இரண்டே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனா்.

IPL Trophy, ஐபிஎல் கோப்பை
ஐபிஎல் கோப்பை  |  Photo Credit: Twitter

ஹைதராபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை துவங்கிய இரண்டே நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாக கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் மிகப்பொிய விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல் டி20 கிாிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை சூப்பா் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய குவாலிபையர் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சொந்த மண்ணிலே சென்னை அணி தோல்வியைத் தழுவியது சிஎஸ்கே ரசிகர்களை பெரும் கவலையடையைச் செய்தது. இருப்பினும் நாளை நடைபெறும் போட்டியில் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவோம் என தல கேப்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

IPL 2019 Final tickets sold out inside 2 minutes

இதற்கிடையே விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் கடைசி ஓவரில்  த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 2-வது தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபையர் 2) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது டெல்லி கேப்பிடல்ஸ். 

IPL 2019 Final tickets sold out inside 2 minutes

இந்நிலையில், ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் வரும் 12-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. ஆன்லைனில் இந்த முறை ரூ.1,500, ரூ.2,000, ரூ.2,500 மற்றும் ரூ.5,000 என டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தன. டிக்கெட் விற்பனை துவங்கிய இரண்டே நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. இதனால் பெரும்பாலான ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், இதன் மூலம் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய வழிவகுத்து கொடுத்திருப்பதாகவும் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் பைனல் இ-டிக்கெட் ஈவெண்ட்ஸ் நவ் (EventsNow) என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
ரசிகர்கள் அதிர்ச்சி.. இரண்டே நிமிடத்தில் விற்றுத் தீா்ந்த ஐபிஎல் டிக்கெட்! Description: ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் இரண்டே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனா்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola