ஐபிஎல் 2019: இறுதிப் போட்டி எங்கே? எப்போது ? முழு விவரம்!

விளையாட்டு
Updated Apr 22, 2019 | 19:18 IST | Times Now

ஐபிஎல் டி 20 கிரிக்கெட்டின் 'பிளே-ஆப்' போட்டிகள் சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

  IPL 2019 final match to be played on may 12
ஐபிஎல் இறுதிப்போட்டி ஹைதராபாத்தில் நடக்கிறது  |  Photo Credit: Twitter

சென்னை:  சென்னை, சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஐ, ஜே, கே ஆகிய மூன்று கேலரிகளும் மூடப்பட்டு உள்ளதால் ஐபிஎல் இறுதிப்போட்டி ஹைதராபாத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

12-வது ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற அனைத்து அணிகளும் கடுமையாக போராடி வருகின்றன.

இதுவரை நடந்துள்ள 39 லீக் ஆட்டத்தில் 10 போட்டிகளில் பங்கேற்றுள்ள சென்னை அணி 3 தோல்வி, 7-ல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. மும்பை இந்தியன்ஸ் 6 வெற்றியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 3-வது இடத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் இருக்கிறது. தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடைசி இடத்தில் உள்ளது. 

லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். நடப்பு ஐபிஎல் சீசனிலும் சென்னை அணியின் ப்ளே ஆப் சுற்று கனவு பிரகாசமாக இருக்கிறது. ஐபிஎல் தொடக்கப் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்றாலும் இறுதிப் போட்டி இந்த மைதானத்தில் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஐ, ஜே, கே ஆகிய மூன்று கேலரிகளும் மூடப்பட்டு இருக்கிறது. மாநகராட்சி அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக கூறி சீல் வைக்கப்பட்டுள்ளது. எனவே இறுதிப்போட்டியை இங்கே நடத்தினால் வருமான இழப்பு ஏற்படும் என ஐபிஎல் நிர்வாகம் கருதுகிறது. இந்த மூன்று கேலரிகளிலும் சுமார் 12000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்க முடியும்.  ஆகவே இறுதிப்போட்டி இங்கு நடத்த முடியாத சூழல் உள்ளது. 

இந்நிலையில் ஹைதரபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பிளே-ஆப்ஸ’ போட்டிகள் சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. ஹைதரபாத்தில் மே 12-ந் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.

NEXT STORY
ஐபிஎல் 2019: இறுதிப் போட்டி எங்கே? எப்போது ? முழு விவரம்! Description: ஐபிஎல் டி 20 கிரிக்கெட்டின் 'பிளே-ஆப்' போட்டிகள் சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.
Loading...
Loading...
Loading...