IPL 2019 Final CSKvMI: பேட்டிங் சரியில்லை - தோல்வி குறித்து மனம் திறந்த தோனி

விளையாட்டு
Updated May 13, 2019 | 12:09 IST | Times Now

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிச்சுற்றில் மும்பையிடம் தோல்வி அடைந்த சென்னை, ரன்னர்-அப்-ஆக வந்தது. போட்டி முடிந்து இந்த தொடர் பற்றி தோனி பேசினார்.

mahendra singh dhoni
மகேந்திரசிங் தோனி  |  Photo Credit: Twitter

ஐபிஎல் 2019ம் ஆண்டு லீக் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்து மும்பை இண்டியன்ஸ் நான்காவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. சென்னைக்கு வெற்றி பிராகாசமாக இருந்த நிலையில், கடைசி ஓவரில் ஒரு பாலுக்கு இரண்டு ரன்கள் இருக்கையில் விக்கெட்டை இழந்து தோல்வி அடைந்தது. சென்னை சந்தித்த 10 ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு எட்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றது சென்னை அணி.

மும்பை வெற்றிக்குப் பின் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, ’’எங்களது டீமுக்கு இது மிகவும் நல்ல தொடராக அமைந்தது, இருந்தாலும் எப்படி வந்தோம் என்பதை பின்னோக்கி பார்க்கதான் வேண்டும். இந்த தொடரில் எங்களுக்கு பேட்டிங் சரியாக அமையவில்லை, அதனையும் மீறி நாங்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். முக்கியமாக மிடில் ஆர்டர் சரியாகவே அமையவில்லை. இந்த பிட்ச் 150 ரன்கள் மட்டும் அடிக்கக்கூடிய பிட்ச் அல்ல. ஆனாலும் எங்களது பௌலர்கள் இவ்வளவு குறைந்த ரன்களுக்கு சுருட்டினர். எங்கள் அணி வீரர்களின் பௌலிங் சிறப்பானதாக இருந்தது. 

ஒவ்வொரு ஓவரிலும் மும்பையும் சென்னையும் மாறி மாறி கோப்பையை தங்களுதாக்கிக் கொண்டு இருந்தோம். அது மிகவும் வேடிக்கையாக இருந்தது. இருஅணிகளும் சில தவறுகள் செய்தன. ஆனால் தவறு குறைவாக செய்த மும்பை வெற்றிபெற்றது. எங்கள் அணி பௌலர்களிடம் ஒரு பிரச்னையும் இல்லை, ஆனால் கண்டிப்பாக பேட்டிங்கில் சரி செய்துகொள்ள வேண்டும், நிச்சயம் எங்கே தவறு என்று பார்த்து சரிசெய்வோம், ஆனால் அதற்கு முன் உலகக்கோப்பை இருக்கிறது. அதற்குப் பின் தான் இவற்றை பற்றியெல்லாம் சிந்திக்க முடியும்’’ என்றார். மேலும் மஞ்சரேக்கர் அடுத்த ஐபில் தொடரில் உங்களைப் பார்ப்போமா என்று கேட்டதற்கு ''நிச்சயம், நம்பிக்கை இருக்கிறது'' என்றார். 

NEXT STORY
IPL 2019 Final CSKvMI: பேட்டிங் சரியில்லை - தோல்வி குறித்து மனம் திறந்த தோனி Description: நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிச்சுற்றில் மும்பையிடம் தோல்வி அடைந்த சென்னை, ரன்னர்-அப்-ஆக வந்தது. போட்டி முடிந்து இந்த தொடர் பற்றி தோனி பேசினார்.
Loading...
Loading...
Loading...