INDvWI: தொடரை வெல்லுமா இந்தியா? - இன்று இறுதி ஒருநாள் போட்டி

விளையாட்டு
Updated Aug 14, 2019 | 10:53 IST | Times Now

இந்திய - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

India vs West Indies
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் மோதல்  |  Photo Credit: AP

ட்ரினிடாட்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டதை தொடர்ந்து, இரண்டாவது போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப் பெற்றது. தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ள இந்திய அணி, இன்று போட்டியில் வெற்றி பெற்று டி-20 தொடரை போலவே ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்குகிறது. 

உலகக்கோப்பை தொடரை போலவே இந்த தொடரிலும் இந்திய அணியின் பௌலிங் மிக சிறப்பாக உள்ளது. ஆனால் பேட்டிங்கில் சில வீரர்கள் இன்னும் சொதப்பி வருகின்றனர். குறிப்பாக ஷிகர் தவான் மற்றும் ரிஷப் பண்ட் தொடர்ந்து தடுமாறி வருகின்றனர். இந்திய அணியின் மிடில் ஆர்டர் கவலைக்குரிய நிலையில் இருந்ததைத் தொடர்ந்து, சென்ற போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் 68 பந்துகளில் 71 ரன்கள் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரின் பங்களிப்பு இந்திய அணிக்கு இன்றைய போட்டியில் மிகவும் முக்கியமானது.

மறுமுனையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பத்தில் இருந்து இந்த தொடர் ஏமாற்றத்தையே அளித்து வருகிறது. பேட்டிங், பௌலிங் என அனைத்திலும் அந்த அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. குறிப்பாக பேட்டிங்கில் டாப் ஆர்டரில் சிலரைத் தவிர வேறு யாரும் நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்து தவறி வருகின்றனர்.  இந்த தொடரில் தொடர்ந்து போட்டியின் போது மழை குறுக்கிட்டு வருகிறது. இன்றைய போட்டியிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தற்போதைய வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.           
 
 

NEXT STORY
INDvWI: தொடரை வெல்லுமா இந்தியா? - இன்று இறுதி ஒருநாள் போட்டி Description: இந்திய - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...