ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: 2 வது இடத்தை தக்கவைத்தது இந்திய மகளிர் அணி!

விளையாட்டு
Updated Oct 07, 2019 | 17:44 IST | Times Now

ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் இந்திய மகளிர் அணி 2வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய மகளிர் அணிக்கு 2 வது இடம்
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய மகளிர் அணிக்கு 2 வது இடம்  |  Photo Credit: BCCL

ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் இந்திய மகளிர் அணி 2வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளதுடன், தரவரிசை புள்ளிகளையும் அதிகரித்துள்ளது. இதனால், 3 வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை விட 3 தரவரிசை புள்ளிகளை அதிகம் கொண்டுள்ளது. திங்கள் கிழமை அன்று ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி 125 புள்ளிகளுடன் 2 வது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கிலாந்து அணி 122 புள்ளிகளுடன் 3 வது இடத்தில் நீடிக்கிறது.

சர்வதேச டி-20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 5 வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 புள்ளிகளை இழந்து 7 வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி 8 வது இடத்தில் இருக்கிறது. மேற்கிந்திய தீவுகளில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி-20 போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றி ஆஸ்திரேலிய மகளிர் அணி, 2வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை விட 14 புள்ளிகள் அதிகம் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

மகளிர் டி-20 தரவரிசையில் இடம்பெற்றுள்ள அணிகளின் எண்ணிக்கை 46 இல் இருந்து 55 ஆக அதிகரிப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி தொடர்ந்து 17 டி-20 போட்டிகளில் வெற்றிபெற்று, ஆஸ்திரேலிய அணியின் முந்தைய சாதனையை முறியடித்த தாய்லாந்து மகளிர் அணி, தரவரிசைப் பட்டியலில் 11 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அயர்லாந்து அணி 10 வது இடத்தில் உள்ளது. 

இந்த ஆண்டில் 25 டி-20 போட்டிகளில் விளையாடி 21 போட்டிகளில் வெற்றிபெற்ற தாய்லாந்து மகளிர் அணி, ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளது.

டென்மார்க் அணி 40வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதேபோல், மெக்ஸிகோ அணி 41 வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. அயர்லாந்து மற்றும் சிங்கப்பூர் அணி தலா 7 தரவரிசைப் புள்ளிகளை இழந்துள்ளன.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...