உலகக்கோப்பை கிரிக்கெட்: தமிழக வீரர்கள் விஜய் சங்கர், தினேஷ் கார்திக்குக்கு வாய்ப்பு!

விளையாட்டு
Updated Apr 15, 2019 | 16:35 IST | Times Now

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர்கள் விஜய் சங்கர், தினேஷ் கார்திக்குக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் தமிழக வீரர்கள் விஜய் சங்கர், தினேஷ் கார்திக்குக்கு வாய்ப்பு
இந்திய அணியில் தமிழக வீரர்கள் விஜய் சங்கர், தினேஷ் கார்திக்குக்கு வாய்ப்பு  |  Photo Credit: AP

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர்கள் விஜய் சங்கர், தினேஷ் கார்திக்குக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுளது. விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான 5 பேர் கொண்ட தேர்வுக் குழுவினர், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்தனர்.

இந்திய அணியைப் பொறுத்தவரை நான்காவது வீரராக களமிறங்க தேர்வு செய்யப்படப்போவது யார் என்பது நீண்டநாள் கேள்விக்குறியாக இருந்து வந்தது. அம்பதி ராயுடு, விஜய் சங்கர், ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர் இடையே இதற்கான போட்டி இருந்து வந்தது. இந்நிலையில், ஆல்-ரவுண்டரான விஜய் சங்கருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கே.எல்.ராகுலுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாற்று விக்கெட் கீப்பருக்கான தேர்வில் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குல்தீப் யாதவ், யுஷ்வேந்திர சஹல் ஆகியோருடன், மூன்றாவது சுழல் பந்துவீச்சாளராக ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது சமி ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் மே மாதம் 30 ஆம் தேதி லண்டனில் தொடங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் போட்டியில் பங்கேற்கின்றன. ஜூன் 5 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி ஜூலை 14 ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

15 பேர் கொண்ட அணி விபரம்:

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், மகேந்திர சிங் தோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்திக், யுஷ்வேந்திர சஹல், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர்குமார், மொகமது சமி, ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா.

 

 

NEXT STORY
உலகக்கோப்பை கிரிக்கெட்: தமிழக வீரர்கள் விஜய் சங்கர், தினேஷ் கார்திக்குக்கு வாய்ப்பு! Description: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர்கள் விஜய் சங்கர், தினேஷ் கார்திக்குக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Loading...
Loading...
Loading...