புவனேஷ்வர் குமார் காயம் குறித்து விராட் கோலி கருத்து!

விளையாட்டு
Updated Jun 17, 2019 | 12:16 IST | Times Now

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்த இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் விரைவில் முழு தகுதியுடன் களம் இறங்குவார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Bhuvanesh Kumar Injury
புவனேஷ்வர் குமாருக்கு காயம்  |  Photo Credit: AP

இங்கிலாந்து: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்த இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் விரைவில் முழு தகுதியுடன் களம் இறங்குவார் என விராட் கோலி தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் உடனான லீக் போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தனது 3 -வது ஓவரை வீசும் போது இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். 

bhuvanesh Kumar Injury

புவனேஷ்வர் குமாருக்கு ஏற்பட்டுள்ள காயம் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.புவனேஷ்வர் குமாரின் காயம் பற்றி தகவல் தெரிவித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, புவனேஷ்வர் குமாருக்கு லேசான காயம் தான் எனவும், பயப்படும் படி எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் இரண்டு அல்லது மூன்று போட்டிகளுக்குள் அவரது காயம் குணமடைந்து விடும் என்றும் அவர் கூறினார். மேலும் அவருக்கு பதில் முகம்மது ஷமி விளையாடுவர் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தொடரில் விளையாட முடியாத நிலையில், தற்போது முன்னணி வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு ஏற்பட்டுள்ள இந்த காயம் இந்திய அணிக்கு பெரும் பின்னைடைவை ஏற்படுத்துமா என்ற கவலை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.           

NEXT STORY
புவனேஷ்வர் குமார் காயம் குறித்து விராட் கோலி கருத்து! Description: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்த இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் விரைவில் முழு தகுதியுடன் களம் இறங்குவார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola