உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவன்!

விளையாட்டு
Updated Aug 29, 2019 | 13:34 IST | Times Now

கடலூரை சேர்ந்த இளவேனில் வளரிவன் புகழ்பெற்ற துப்பாக்கி சுடுதல் வீரர் ககங் நாரங்கிடம் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.     

துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பையில் தங்கம் வென்றார் இளவேனில் வளரிவன், Elavenil Valarivan wins gols in ISSF World Cup
துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பையில் தங்கம் வென்றார் இளவேனில் வளரிவன்  |  Photo Credit: Twitter

பிரேசில்: பிரேசிலில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பையில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை இளவேனில் வளரிவன் தங்கம் வென்றார்.

ஐ.எஸ்.எஸ்.எப் சார்பில் நடத்தப்படும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தற்போது பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வருகிறது . இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவை சேர்ந்த அஞ்சும் மௌட்கில் மற்றும் இளவேனில் வளரிவன் முன்னேறினர். இதில் இளவேனில் வளரிவன் 251.7 புள்ளிகள் எடுத்து தங்கம் வென்றார். 250.6 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்த பிரிட்டனை சேர்ந்த சீயோனேய்ட் மேக்கின்டோஷ் வெள்ளி பதக்கத்தை வென்றார். மேலும் மூன்றாவது இடத்தை பிடித்த தய்வானை சேர்ந்த யிங் ஷின் லின் வெண்கலம் வென்றார்.  

 

 

 

         

 

ஏற்கனவே சென்ற ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இளவேனில் வளரிவன் தங்கம் வென்றுள்ளார். 20 வயதே ஆன இளவேனில் வளரிவான் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பையில் இந்தியாவில் இருந்து தங்கம் வெல்லும் மூன்றாவது வீராங்கனை ஆவர். இவருக்கு முன் அபூர்வி சாந்தலா மற்றும் அஞ்சலி பகவத் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர். இளவேனில் வளரிவன் சீனியர் பிரிவில் பங்குபெறும் முதல் உலகக்கோப்பை இதுதான். இருப்பினும் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளாதால் அவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கடலூரை சேர்ந்த இளவேனில் வளரிவன் புகழ்பெற்ற துப்பாக்கி சுடுதல் வீரர் ககங் நாரங்கிடம் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.     
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...