CSK vs MI: 4-வது முறையாக மகுடம் சூடப்போவது யார்? சென்னை - மும்பை இன்று பலப்பரீட்சை

விளையாட்டு
Updated May 12, 2019 | 11:19 IST | S.Karthikeyan

இளம் வீரர்களை கொண்ட மும்பை அணியும், அனுபவ வீரர்களுடன் களமிறங்கும் சென்னை அணியும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்துவதால் இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL champion trophy, ஐபிஎல் கோப்பை
ஐபிஎல் கோப்பை 

ஹைதராபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 

கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதித் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் நடப்பு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. 

இறுதிப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதுவரை நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடர்களில்  மும்பை அணி 4 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி, 3 முறை கோப்பையை வென்றுள்ளது. அதில், முக்கியமான விஷயம் என்னவென்றால் 2 முறை சென்னை அணியை வீழ்த்தி கோப்பை வென்றுள்ளது. சென்னை அணியும் 8 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி 3 முறை கோப்பையை வென்றுள்ளது. 

Indian Premier League (IPL) 2019 final, MI vs CSK

சென்னை சூப்பர் கிங்ஸை பொறுத்த வரை பேட்டிங்கில் டுபிளெசிஸ், வாட்சன், சுரேஷ் ரெய்னா, ராயுடு, தோனி என பட்டாளமே இருக்கிறது.  பவுலிங்கில் ஜடேஜா, ஹர்பஜன்சிங், தாஹிர் ஆகியோர் உள்ளனர். அனைவரும் ஒரே புள்ளியில் செயல்படும் பட்சத்தில் மும்பைக்கு கடும் நெருக்கடி கொடுக்கலாம்.

Indian Premier League (IPL) 2019 final, MI vs CSK

மும்பை அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஏனேனில் கடந்த காலங்களில் இறுதிப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி இருப்பதால் மும்பை இந்தியன்ஸ் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளது. அந்த அணியின் பேட்டிங் வரிசையில் டி காக், சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா சிறப்பாக உள்ளனர். குறிப்பாக ஹர்திக் பாண்டியா,பும்ரா ஆகியோரும் அணியின் வெற்றிக்கு பாடுபடுவர். பவுலிங்கிலும் அந்த அணி வலுவாக உள்ளது. 

Indian Premier League (IPL) 2019 final, MI vs CSK

ஹைதராபாத் ஸ்டேடியம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் இவ்விரு அணிகளும் கடுமையாக போராடி கோப்பையை 4-வது முறையாக வென்று சாதனை படைக்கும் நோக்கில் போராட வேண்டி இருக்கும். இளம் வீரர்களை கொண்ட மும்பை அணியும், அனுபவ வீரர்களுடன் களமிறங்கும் சென்னை அணியும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்துவதால் இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Indian Premier League (IPL) 2019 final, MI vs CSK

இரு அணிகளுமே 3 முறை கோப்பையை வென்றுள்ளதால் 4-வது தடவையாக ஐ.பி.எல். கோப்பையை வென்று சாதனை படைக்கபோவது சென்னையா? மும்பையா? என்ற எதிர்பார்ப்பும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

NEXT STORY
CSK vs MI: 4-வது முறையாக மகுடம் சூடப்போவது யார்? சென்னை - மும்பை இன்று பலப்பரீட்சை Description: இளம் வீரர்களை கொண்ட மும்பை அணியும், அனுபவ வீரர்களுடன் களமிறங்கும் சென்னை அணியும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்துவதால் இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola