வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு ஒத்திவைப்பு

விளையாட்டு
Updated Jul 19, 2019 | 11:49 IST | Times Now

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Indian Cricket Team
இந்திய கிரிக்கெட் அணி  |  Photo Credit: AP

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு இன்று நடைபெற இருந்த நிலையில், திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் தொடரை விட்டு வெளியேறியது. அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. மூன்று டி-20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில்  இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் மும்பையில் இன்று மாலை கூடி வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான தேர்வு செய்ய இருந்தனர். ஆனால் காயத்தில் உள்ள வீரகளின் உடற்தகுதி குறித்த அறிக்கை நாளை மாலை தான் வரவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேர்வு குழுவில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் பங்கேற்க கூடாது என்று உச்சநீதிமன்றம் நியமித்த நிர்வாக குழு உத்தரவிட்டது. இந்த காரணங்களால் இன்று நடைபெற இருந்த அணி தேர்வு நாளை அல்லது நாளை மறுநாள்  நடைபெறும் என்று தெரியவருகிறது.        

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணி தேர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் தொடரில் விளையாடுவர் என்று தெரியவருகிறது. மேலும் இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இன்றி தோனியின் எதிர்காலம் குறித்தும், அவர் இந்த தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பதும் இந்திய அணி அறிவிக்கப்படும்போது தெரியவரும்.
  

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...